சுகாதார அமைச்சு இன்று 15,759 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்து, மொத்த நேர்வுகளின் எண்ணிக்கையை 2,127,934 ஆக பதிவு செய்துள்ளது.
தீவிரச் சிகிச்சை பிரிவில் 1,117 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் 635 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைபடுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சரவாக் (3,732), ஜொகூர் (1,959), சிலாங்கூர் (1,934), பினாங்கு (1,417), கிளந்தான் (1,338), சபா (1,291), பேராக் (1,184), கெடா (786), பகாங் (707), திரெங்கானு (592), கோலாலம்பூர் (359), மலாக்கா (264), நெகிரி செம்பிலான் (127), புத்ராஜெயா (34), பெர்லிஸ் (23), லாபுவான் (12).
சுகாதார அமைச்சு தற்போது 1,315 செயலில் உள்ள திரளைகளைக் கண்காணித்து வருகிறது, இது கடந்த செவ்வாயன்று 1,448 ஆக இருந்தது.
இன்று, மேலும் 23 திரளைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றுள் ஒன்பது பணியிடங்கள் சம்பந்தப்பட்டவை, மற்ற ஒன்பதும் சமூகப் பரவுதல் தொடர்புடையவை.