பெட்ரோல் நிலையம், உணவகம் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்

பெட்ரோல் நிலையச் சேவைகள், உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் செயல்பாட்டு நேரத்தைக் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறது, கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (பிகேபிடி) உட்பட்ட இடங்கள் தவிர.

இன்று நடைபெற்ற கோவிட் -19 காலாண்டு அமைச்சர்களின் இரண்டாவது கூட்டத்தில் இந்த முன்மொழிவு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாளை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான கோவிட் -19 தொற்றுநோய் மேலாண்மை சிறப்பு குழுவுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றும் மூத்தப் பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார்.

“இந்தச் சந்திப்பு, 181 எஸ்.ஓ.பி.க்களை 10 ஆக எளிமையாக்கும் முயற்சிகளுடன் நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது, இதனால் அக்டோபர் தொடக்கத்தில் திட்டமிட்டபடி முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் இன்று கூறினார்.

உண்மையிலேயே பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தியப் பின், மாநிலங்களுக்கு இடையேயான அனுமதி பொறுப்புடன் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

லங்காவி சுற்றுலா குமிழி முன்னோட்டத் திட்டம் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட நீண்ட தூரத்தில் வசிக்கும் தம்பதிகள் சந்தித்தல் போன்ற மாநிலங்களுக்கு இடையேயான சலுகைகளை அரசாங்கம் இப்போது வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

  • பெர்னாமா