அம்னோ மூத்தத் தலைவர் தெங்கு ராசலே ஹம்சா, அம்னோ ஆலோசனை குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். இது கடந்த திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
மலேசியாகினி பார்த்த ஒரு கடிதத்தில், தெங்கு ராசலே அல்லது கு லி, இந்தப் பதவிக்கான நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறினார்.
கடந்த திங்கள் தேதியிட்ட அக்கடிதத்தில், பெர்சத்துவுடன் இன்னும் இணைந்து வேலை செய்துகொண்டிருந்ததால், அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் அம்னோவின் திறன் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார்.
“15-வது பொதுத் தேர்தலில், நம் தோல்வியை மீட்டெடுப்பதற்கும் இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்றத்தை முடிப்பதற்கும் அவர்களால் நம் கட்சிக்கு உதவ முடியுமா?
“15-வது பொதுத் தேர்தலில் கட்சி வெற்றி பெற நாம் அவர்களை நம்பலாமா?” என்றும் அம்னோ தலைவர் ஜாஹித் ஹமிடிக்கு எழுதிய கடிதத்தில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.