தலைநகரைச் சுற்றியுள்ள மளிகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சீன மருந்துக் கடைகளில், இன்று முதல் அமல்படுத்தப்படவிருந்த மதுபானங்கள் மீதான தடை அக்டோபர் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மாநகர மன்றம் (டிபிகேஎல்), நேற்று வெளியிட்ட அறிக்கையில், கோலாலம்பூரில் மது விற்பனைக் கட்டுப்பாடு தொடர்பான ஆய்வை முடிக்கும் நோக்கில், தடை அமலாக்கம் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறியது.
“பொது பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவிக்கும் மதுபானத்தை, எளிதில் அணுகுவது தொடர்பில் புகார்கள் மற்றும் பல எதிர்ப்புகள் வந்தன,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சில்லறை மதுபான உரிமம், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சீன மருந்து கடைகளில் அக்டோபர் 31 வரை மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிபிகேஎல் முன்பு சில்லறை மதுபான உரிமத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது, அதில் 15 நவம்பர் 2020 முதல் நடைமுறைக்கு வந்தன, மற்றவற்றுடன் 1 அக்டோபர் 2021 முதல் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சீன மருந்து கடைகளில் மது விற்பனை அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
- பெர்னாமா