பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர் அன்வர் இப்ராஹிம், மாநில அரசாங்க நெருக்கடி தொடர்பாக அவருக்கும் மலாக்கா யாங் டி-பெர்த்துவா நெகிரி அலி ருஸ்தாமுக்கும் இடையிலான சந்திப்பு பற்றிய ஊக அறிக்கைகளை மறுத்தார்.
இன்று, போர்ட்டிக்சன் தெலுக் கெமாங் கடற்கரையில், செய்தியாளர்களிடம் பேசிய அன்வர், முகமது அலியைச் சந்திக்க தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று கூறினார்.
“முகமது அலியச் சந்திக்க நான் கேட்கிறேன் என்று இதற்கு முன் செய்தி இருந்தது. இல்லை … மலாக்கா யாங் டி-பெர்த்துவா நெகிரியைச் சந்திக்க விண்ணப்பம் எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.
நேற்று, மாநில அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சியாக குறிப்பிடப்பட்ட “மலாக்கா நகர்வு” என்ற ஒரு முயற்சியின் காரணமாக, மலாக்கா அரசியல் பலரின் கவனத்திற்கு வந்தது.
எவ்வாறாயினும், பி.கே.ஆரின் உள் ஆதாரம், இந்த முயற்சி பி.எச்.-இல் உள்ள எந்தவொரு நபராலும் இயக்கப்படவில்லை என்று மலேசியாகினியிடம் கூறினார். அதற்குப் பதிலாக, அது மலாக்கா அரசாங்கமாக மாறிய கட்சி சம்பந்தப்பட்ட ஓர் உள் மோதலில் இருந்து உருவானது என்று அந்த ஆதாரம் கூறியது.
Disoal lebih lanjut Anwar berkata ada orang tertentu memaklumkan mengenai pergolakan di Melaka tetapi setakat apa yang diketahuinya, tidak ada sesuatu pun yang konkrit.
அரசாங்கத்தை மாற்றி, மலாக்கா முதல்வர் சுலைமான் அலியைக் கவிழ்க்கும் முயற்சி இருப்பதை உறுதிப்படுத்த கேட்டதற்கு, பிகேஆர் தலைவரான அன்வர், “நீங்கள் அதை மலாக்காவிடம் கேட்க வேண்டும்,” என்று பதிலளித்தார்.
இதற்கிடையில், பெட்டாலிங் ஜெயாவில், அன்வரும் 11 மலாக்கா பிஎச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையேயான சந்திப்பு பற்றி கேட்டபோது, நேற்றிரவு, அது ஒரு சாதாரண சந்திப்பு என்று அன்வர் விளக்கினார்.
சிலாங்கூர், பேராக், பினாங்கு, நெகிரி செம்பிலான், சபா மற்றும் மலாக்கா உட்பட, மாநில அளவில் பிஎச் தலைவர்களுடன் தான் கலந்துரையாடியதாக அன்வர் கூறினார்.