சாலாக் செலாத்தான் கோவிலுக்கு முன் நடந்த கலவரம் – விளக்கம்

பண்டுவான்கினி | செப்டம்பர் 28-ம் தேதி, சமூக ஊடகங்களில் பரவிய பல காணொளிகள் காவல்துறை அதிகாரிகளுடன் தனிநபர் குழு சம்பந்தப்பட்ட கலவரங்களைக் காட்டின.

பலரின் கவனத்தை ஈர்த்த இந்தச் சம்பவம் தொடர்பாக, 24 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை, எந்தவொரு தரப்பும் இது குறித்து தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை, ஏனெனில் இந்தப் பிரச்சினை பல பங்குதாரர்களை உள்ளடக்கியது.

பண்டுவான்கினி எழுந்துள்ள குழப்பங்களை விளக்குகிறது.

கோயில் இடிக்கப்பட்டதா?

இல்லை. சம்பந்தப்பட்ட கோயில் – தோக்கோங் சீ ஹாவ், சாலாக் செலாத்தான், கோலாலம்பூர் – எந்தவொரு தொந்தரவு செய்யப்படவில்லை.

அதிகாரிகள் ஏன் புல்டோசர் இயந்திரத்தைக் கொண்டு வந்தனர்?

தெற்கில், தை ஹுங் சீனப் பள்ளிக்கும் கோயிலுக்கும் இடையில் உள்ள சிறிய நிலத்தை அதிகாரிகள் எடுக்க விரும்புகிறார்கள்.

இது அரசாங்க நிலம் மற்றும் கோயிலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நிலப்பகுதிக்குச் செல்லும் ஒரு வழித்தடமாக அதை மேம்படுத்த வேண்டியிருந்தது, அங்கு ஓர் இடைநிலைப் பள்ளி கட்டப்படும்.

இருப்பினும், முன்பு பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால், கோயில் நிர்வாகம் நீண்ட காலமாக, வேலி அமைத்து, அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தது.

செப்டம்பர் 28 அன்று, காவல்துறை சம்பந்தப்பட்ட கலவரம் ஏன் ஏற்பட்டது?

கோவிலின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் ஒரு குழு, அதிகாரிகள் கோயில் வளாகத்தை ஆக்கிரமிக்கிறார்கள் என்று கருதி போலீசாரை எதிர்கொண்டனர்.

இந்தச் சம்பவம் கோயிலுடன் தொடர்புடைய சிங்க நடன உறுப்பினர்களால் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் அந்த வீடியோ நீக்கப்பட்டது.

மலேசியாகினியிடம் பேசுகையில், கோயில் சட்ட ஆலோசகர், சான் குயின் எர், அதிகாரிகளின் “ஆக்ரோஷமான அணுகுமுறை” மற்றும் இந்தச் சம்பவத்தில் கோவில் ஆதரவாளர்களின் அதிகப்படியான எதிர்வினை பற்றி விவரித்தார்.

“உண்மையில் இதை இணக்கமாகக் கையாள முடியும். ஆனால், தவறான புரிதல்கள் மற்றும் தவறான தொடர்பு காரணமாக, இந்த வருந்தத்தக்க மோதல் ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.

வெற்றி பெறும் சூழ்நிலையை அடைய, கோயில் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

இதுவரை, “கலவரம் செய்ததாக” சந்தேகத்தின் பேரில் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயில் மன்னிப்பு கோரியதுடன், நிலத்திற்கான உரிமைகோரலைத் திரும்பப் பெறுவதாகவும் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் தை துங் சீனப் பள்ளிக்கு என்ன சம்பந்தம்?

தை துங் சீனப் பள்ளியின் பிரதான நுழைவாயில், புதிய இடைநிலைப்பள்ளி கட்டப்படும் பகுதியில் அமைந்துள்ளது.

இப்பகுதியில், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறுகிய பின்புற நுழைவாயிலைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

பள்ளி வாரியத் தலைவர் லிம் தியோங் க்வீ, பள்ளி நிர்வாகம், நஜிப் ரசாக் காலத்திலிருந்து, மூன்று துணைக் கல்வி அமைச்சர்களின் உதவியை நாடியதாக மலேசியாகினியிடம் கூறினார்.

செப்டம்பர் 21 அன்று கூடைப்பந்து மைதானத்தை அதிகாரிகள் இடித்தனர்

பிரதான நுழைவாயிலைப் பயன்படுத்த அனுமதிக்கும்படி, அவர்கள் அரசாங்கத்திடம் கோர விரும்புகிறார்கள்.

“இந்த விவகாரம் கடந்த மே 6 வரை தொடர்ந்தது, நில அலுவலகம் திடீரென எங்களுக்கு 14 நாட்களுக்குள் நிலத்தைக் காலி செய்யுமாறு கடிதம் அனுப்பியது,” என்று லிம் கூறினார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைப் பாதிக்காத வகையில், இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை, அரசாங்கம் பிரதான நுழைவாயிலை மூடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

தற்போது, ​​அவர்கள் பள்ளிகளுக்குள் நுழைவதற்கு அவசர கதவுகளை பயன்படுத்துகின்றனர், லிம்மின் கூற்றுபடி இது ஒரு நீண்ட கால தீர்வு அல்ல.

தை துங் சீனப் பள்ளி ஏன் அரசாங்க நிலத்தை நுழைவாயிலாகப் பயன்படுத்துகிறது?

1990-களின் பிற்பகுதியிலிருந்து, அந்நிலத்தின் உரிமைக்காக பள்ளி அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. அப்போதிருந்து, இது பள்ளியின் பிரதான நுழைவாயிலாக மாறியது.

கல்வி அமைச்சும் கூட்டரசுப் பிரதேச நிலம் மற்றும் சுரங்க அலுவலகமும், 2.607 ஏக்கர் அரசாங்க இருப்பு நிலத்தை, பள்ளி இலவசமாக பயன்படுத்த அனுமதித்தபோது (கீழே உள்ள வரைபடத்தில் #6 எனக் குறிக்கப்பட்டுள்ளது) நில உரிமைக்கான சர்ச்சைகள் 2015-இல் நிறுத்தப்பட்டன.

2015-ஆம் ஆண்டில், பள்ளிக்கும் கூட்டரசுப் பிரதேச நிலம் மற்றும் சுரங்க அலுவலகத்திற்கும் இடையே எழுதப்பட்ட ஒப்பந்தக் கடிதத்தை மலேசியாகினி பார்த்தது – அரசுக்குத் திரும்பத் தேவைப்படும் போது பள்ளிகள் இழப்பீடு இல்லாமல் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது,

இன்றுவரை, தை துங் சீனப் பள்ளி, பயன்படுத்தப்படாமல் இருந்த அந்நிலத்தில், கார் நிறுத்துமிடம், பிரதான நுழைவாயில் மற்றும் கூடைப்பந்து மைதானம் போன்றவற்றை எழுப்ப RM700,000 செலவழித்துள்ளது.

இருப்பினும், 2017-ஆம் ஆண்டில், அரசாங்கம் ஒப்பந்தத்தை இரத்து செய்து, புதியப் பள்ளியைக் கட்டுவதற்காக நிலத்தை மீட்டது.

அப்போதிருந்து, தை துங் சீனப் பள்ளி நிர்வாகம் அந்நிலத்தைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கும்படி அரசாங்கத்தைச் சம்மதிக்கவைக்கும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

மற்ற பகுதிகளில் அரசாங்கம் ஏன் பள்ளிகளை உருவாக்க முடியாது?

துணைக் கல்வி அமைச்சர், டாக்டர் மா ஹாங் சூன், தை துங் சீனப் பள்ளிக்கும் தொக்கோங் சீ-க்கும் அருகிலுள்ள அந்நிலம் ஒரு புதிய இடைநிலைப் பள்ளியைக் கட்ட மிகவும் ஏற்ற இடமாகக் கல்வி அமைச்சு கருதுகிறது என்றார்.

சுற்றியுள்ள பகுதியில், மலிவு விலை அடுக்குமாடி வீடு கொண்ட 7,000 குடியிருப்பாளர்களுக்கு அது உதவும் என்றார் அவர்.