சுடிர்மான் கோப்பை : விளையாட்டாளர்களை அவமதிக்காதீர்கள் – அஹ்மத் ஃபைசல்

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அஹ்மத் ஃபைசல் அஸுமு, பின்லாந்தின், வந்தாவில், 2021 சுடிர்மான் கோப்பை பிரச்சார ஆட்டத்தில், தேசிய ஒற்றையர் வீரர் ஒருவருக்கு எதிராக, ஒரு சமூக ஊடகப் பயனர் வீசிய இனவெறி அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது, குறிப்பாக விளையாட்டாளர் நாட்டைப் பிரபலமாக்குவதற்குத் தனது சிறந்த திறனைக் காட்டி போராடினார்.

“இந்த மலேசியக் குடும்பம் ஒரு வாழைப்பழத் தாரைப் போன்றது, சில நல்லவை, சில கெட்டவை, சிலருக்கு ஒரு கருத்தைப் பேசுவதில் நல்ல மொழியைப் பயன்படுத்தத் தெரியாது.

“நாம் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், கடசான்கள், இபான்கள் மற்றும் பலரால் ஆனவர்கள். குறிப்பாக, மலேசியாவின் பெயரைப் பிரபலப்படுத்த போராடுபவர்களை இனம், தோல் மற்றும் மதத்தைக் காட்டி வெறுக்காதீர்கள்,” என்று கூறுனார்.

முன்னதாக, நேற்றிரவு, போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடும்போது விளையாட்டாளருக்கு எதிரான அந்த இனவெறி அறிக்கை பரப்பப்பட்டது.

போட்டியில், மலேசியா 1-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோற்றது, இதனால் இன்று நடக்கவிருந்த இறுதிப் போட்டிக்கான தகுதியைப் பெற முடியவில்லை.

2021 சுடிர்மான் கோப்பை போட்டியில், தேசியப் பூப்பந்து விளையாட்டு வீரர்களின் செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த அஹ்மத் ஃபைசல், அரையிறுதிக்குத் தகுதி பெற வீரர்கள் காட்டிய உற்சாகம் தன்னைக் கவர்ந்தது என்றார்.

“அவர்கள் எங்களிடம் காலிறுதிக்குச் செல்வதாக உறுதியளித்தனர், ஆனால் அவர்கள் அரையிறுதி வரை முன்னேறினர், மலேசியர்கள் இரவில் தூங்காமல், அவர்கள் விளையாடுவதைப் பார்த்தனர். அனைத்து முயற்சிக்குப் பின்னர், (அரையிறுதி) அவர்கள் தோல்வியைத் தழுவினர். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவர்கள் அற்புதமான விளையாட்டைக் காட்டியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

சுடிர்மான் கோப்பையில் அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில், தேசியப் பூப்பந்து வீரர்கள், டென்மார்க், அர்ஹஸில், அக்டோபர் 9 முதல் 17 வரை நடைபெற உள்ள தாமஸ் கோப்பையின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள் என்று நம்புவதாக அகமது ஃபைசல் கூறினார்.

  • பெர்னாமா