‘வதந்தி’ – புதியக் கட்சி பற்றி ஜுரைடா

முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி உருவாக்கியதாகக் கூறப்படும் புதிய அரசியல் கட்சி பற்றிய வதந்திகளை, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுரைடா காமாருடின் மறுத்தார்.

“அவை வதந்திகள்,” என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னதாக, சமூக ஊடகங்களில் இது குறித்த வதந்திகள் பரவின, மற்றவற்றுடன், கட்சி அஸ்மின் தலைமையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இப்போது சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருக்கும் அஸ்மின், பெர்சத்துவின் உதவித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மலேசியாகினியின் உளவுத்துறை, பல ஆதாரங்கள் மூலம் இந்த விஷயம் உண்மையாகிவிடும் என்றத் தோற்றத்தை அளிக்கிறது என்றது.

அஸ்மின் மற்றும் ஜுரைடா தலைமையிலான தேசியச் சமூக இயக்க அமைப்பின் மூலம் இது தூண்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

புதியக் கட்சி, பல இனங்கள் சார்ந்த கட்சியாகவும் தேசியக் கூட்டணியின் (தே.கூ.) ஒரு பகுதியாகவும் இருக்கும், இதனால் அது அரசாங்கத்தை ஆதரிக்கும்.

இது தவிர, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

அன்வர் இப்ராகிமுக்கு அதிகாரத்தை மாற்றுவதைத் தடுக்க, கடந்த ஆண்டு கட்சியை விட்டு வெளியேறிய அஸ்மின் அலி தலைமையிலான பிகேஆரின் எம்.பி.க்களில் ஜுரைடாவும் ஒருவர்.

‘ஷெரட்டன் நகர்வு’ எனப்படும் அரசியல் நெருக்கடியால், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது, புதிய தேசியக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் முஹைதீன் யாசின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அஸ்மினும் ஜுரைடாவும் பின்னர் முஹைதீன் தலைமையிலான பெர்சத்துவில் சேர்ந்தனர்.