கிராஃபிக் டிசைனர் ஃபஹ்மி ரேசா மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டார், இந்த முறை ‘கெழுவார்கா மலேசியா‘ (மலேசியக் குடும்பம்) கேலிசித்திர சுவரொட்டி மற்றும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் கேலிச்சித்திரம் தொடர்பாக.
‘மலேசியக் குடும்பம்’ என்பது இஸ்மாயில் சப்ரி முன்பு அறிமுகப்படுத்திய கருத்தை குறிக்கிறது.
“இஸ்மாயில் சப்ரியின் கேலிச்சித்திரத்துடன், மலேசியக் குடும்பம் கேலிசித்திர சுவரொட்டி தொடர்பில் விசாரணைச் செய்த போலிசார் என்னைக் கைது செய்தனர்.
“வங்சா மாஜு ஐபிடியில் தடுத்து வைக்கப்பட்டேன்,” என்று அவர் தனது கீச்சகத்தில் கூறினார்.
ஃபஹ்மி அந்தக் கேலிச்சித்திர சுவரொட்டியைக் கீச்சகத்தில் பதிவேற்றினார்.
இன்று மதியம் 2.30 மணியளவில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் பிற்பகல் 4 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
மாலை 6.30 மணியளவில், போலீஸ் ஜாமீனில் ஃபஹ்மி விடுவிக்கப்பட்டார்.
“இன்று பிற்பகல் 4 மணி முதல் காவலில் வைக்கப்பட்ட பிறகு, எனது தொலைபேசியைப் போலீசார் பறிமுதல் செய்தனர், என் கைரேகைகளை எடுத்து ஒரு குற்றவாளியைப் போல என்னைப் படம் பிடித்தனர்.
“அவர்கள் டிஎன்ஏ எடுக்க விரும்பினார்கள், ஆனால் நான் அதைப் பகிரவில்லை. பிறகு என்னைப் போலீஸ் ஜாமீனில் விடுவிக்க போலீசார் முடிவு செய்தனர்.
“இன்றிரவு தடுப்புக் காவல் அறையில் தூங்க வேண்டிய அவசியம் இல்லை,” என்று அவர் மற்றொரு கீச்சகப் புதுப்பிப்பில் கூறினார்.
ஃபாஹ்மியைத் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233, தண்டனைச் சட்டம் பிரிவு 504 மற்றும் சிறு குற்றச் சட்டம் 1955-இன் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரிப்பதாக, ஃபஹ்மியின் வழக்கறிஞர் ராஜ்சுரியன் பிள்ளை கூறினார்.