சில தரப்பினர் குற்றம் சாட்டியபடி, மஜ்லிஸ் அமானா ரக்யாட் -இன் (மாரா) கீழ் எந்தக் கல்வி கடன் ஏற்பாதரவும், கேபிள்
, விருப்பு வெறுப்பு மற்றும் பிரமுகர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை போன்ற எந்தவொரு விதிமுறையும் இல்லை என்று மாரா தலைவர் அஸிசா முகமட் டுன் கூறினார்.
கல்வி கடன் ஏற்பாதரவு வழங்குவது இதுவரை நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது, குறிப்பாக கல்வி தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி.
“விஐபி குழந்தைகள் அல்லது தி20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூட, நாங்கள் நிர்ணயித்த அளவுகோல்களுக்குத் தகுதிபெறவில்லை என்றால், அவர்களால் ஏற்பாதரவு அல்லது கல்வி கடன் பெற முடியாது,” என்று கீச்சகத்தின் மூலம் பெர்னாமாவிடம் கூறினார்.
கல்வி உட்பட பல்வேறு அம்சங்களில் பூமிபுத்ராவின் வளர்ச்சிக்கு மாரா நீண்ட காலமாக பங்களித்து வருவதால், சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றவை என்று அஸிசா கூறினார்.
கல்வித் தகுதிகளின் அடிப்படையில், சிறந்த மாணவர்களுக்கு மாறுபட்ட கல்வி கடன்கள் வடிவில், ஆயத்த திட்டம் முதல் முதுகலை பட்டம், தத்துவ மருத்துவர் (பிஎச்டி) நிலை வரை கல்வி ஏற்பாதரவை மாரா வழங்குகிறது.
மாறுபட்ட கடன்கள் என்பது பெறப்பட்ட முழு படிப்புக் கடனும் நிறுவப்பட்ட கொள்கைகளுக்கு உட்பட்டு, பட்டப்படிப்பு முடித்தவுடன் மாணவரின் கல்வித் திறனை அடிப்படையாகக் கொண்டு திருப்பிச் செலுத்துவதைக் குறைக்கலாம் என்று அர்த்தம்.
ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில், 50,555 மாணவர்கள் மாரா ஏற்பாதரவு மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கல்வியைத் தொடங்கியுள்ளனர். அவர்களில் 89 விழுக்காடு அல்லது 44,994 மாணவர்கள் பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள், 10 விழுக்காட்டினர் அல்லது 5,055 மாணவர்கள் எம்40 பிரிவையும் ஒரு விழுக்காடு அல்லது 506 மாணவர்கள் தி20 பிரிவையும் சேர்ந்தவர்கள் என்றார் அஸீசா.
பியூஃபோர்ட் எம்.பி., கல்வி அமைப்புக் பிரிவு (பிபிபி) மூலம் மாரா இந்த ஆண்டு, குறிப்பாக அதன் கல்வி கடன் திட்டத்திற்காக அரசிடமிருந்து 2 பில்லியன் வளர்ச்சி செலவின ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது என்றார்.
60,000 மாணவர்களுக்கான கல்விக் கடன்களுக்கு, அதாவது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், 35,000 மாணவர்கள் கல்வியைத் தொடரவும் 25,000 புதிய மாணவர்கள் கல்வியைத் தொடங்கவும் நிதியளிப்பதற்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
“உண்மையில், நாங்கள் கல்விக்காக நிறைய செலவழிக்கிறோம், ஏனென்றால் கல்வியின் மூலம் நாம் வெற்றிகரமான, சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும் என்பதோடு, அவர்களால் நாட்டிற்குப் பங்களிக்க மீண்டும் கொடுக்கவும் முடியும்,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா