மத்திய மட்டத்தில் நிலைமை இன்னும் தெளிவாக இல்லை என்றாலும், அடுத்த பொதுத் தேர்தலை (ஜிஇ) எதிர்கொள்ள இரு கட்சிகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்த, சிலாங்கூர் அம்னோவும் பாஸ் கட்சியும் இன்று தங்கள் உடன்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
மாநில அம்னோ தலைவர் நோ ஒமர் மற்றும் பாஸ் தலைவர் டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி ஆகியோர் ஓர் ஊடக அறிக்கையில் இந்த விஷயத்தைத் தெரிவித்தனர்.
“சிலாங்கூரில் இரு கட்சிகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்த, எம்என் சார்பாக கூட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்,” என்று அவர்கள் கூறினர்.
இதுவரை, தேசிய முன்னணியும் பெர்சத்துவும் அடுத்த பொதுத் தேர்தலில் மோதும் வாய்ப்புள்ளது.
இருப்பினும், பாஸ் கட்சி எந்தக் கூட்டணியில் சேரும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.
இதற்கிடையில், நோஹ் மற்றும் யூனுஸ் இருவரும் இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான “மலேசியக் குடும்பம்” அரசாங்கத்திற்குத் தங்களின் பிரிக்கப்படாத ஆதரவை அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.