விரைவில் அறிவிக்கப்படவுள்ள மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அமலுக்கு வரும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
“காத்திருங்கள், நான் அறிவிக்கிறேன். ஆனால், இன்னும் நீண்ட காலம் இருக்காது, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் அறிவிக்கப்படும்.
“கடந்த காலத்தில், தடுப்பூசி விகிதம் 80 விழுக்காட்டை எட்டியபோது நாங்கள் அனுமதி வழங்க விரும்பினோம், ஆனால் மற்ற மாநிலங்களில் அது இன்னும் குறைவாகவே இருந்தது. எனவே, அனைத்து மாநிலங்களுக்கிடையிலான எல்லைகளைத் திறந்தால், அது சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.
“90 விழுக்காடு தடுப்பூசி பெற்றவுடன் அனுமதி வழங்கப்பட்டால், மாநிலங்கள் சராசரி தடுப்பூசிகளின் மிக அதிக சதவீதத்தை அடைந்திருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் இன்று கோலாலம்பூர், அங்காசாபூரியில் கூறினார்.