நோர்லேலா : ‘ஒடுக்குபவர்களைத் தூக்கி எறிய வேண்டும்’ 

இன்று, பினாங்கு சுகாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் நோர்லெலா ஆரிஃபின், பல டிஏபி எம்.பி.க்களையும் அவர்களின் தலைவர் லிம் குவான் எங்-ஐயும் ஒடுக்குமுறையாளர்கள் என்று குற்றம் சாட்டினார்.

அந்தப் பெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் (பி.கே.ஆர்), மாநிலத்தில் கோவிட் -19 நடவடிக்கையில் தனது பங்கை ஆதரிக்கும் அறிக்கையை வெளியிட்ட பிறகு, இவ்வாறு கூறினார்.

நோர்லெலா பிகேஆர் சகாக்கள் காட்டும் ஒற்றுமையைப் பெரிதும் பாராட்டுவதாக இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

லிம், பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர், ஃபீ பூன் போஹ் மற்றும் புலாவ் திகூஸ் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ் லீ ஆகியோர் தன்னைச் சங்கடப்படுத்தும் வகையில், பினாங்கில் கோவிட் -19 நேர்வுகளைக் குறைத்ததற்காக டிஏபி எம்.பி.க்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்கள் என்று அவர் விளக்கினார்.

“கோவிட் -19 நேர்வுகளின் அனைத்து குறைப்புகளும், பீ (பினாங்கு அவசரகாலக் குழுவின் தலைவர்) மற்றும் ஸ்டீவன் சிம் (கோவிட் -19 பினாங்கு-புத்ராஜெயா ஒருங்கிணைப்பாளர்) நியமிக்கப்பட்டதால்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

“நான், சுகாதாரப் பொறுப்பாளராக, அவர்களிடமிருந்து (பீ மற்றும் சிம்) கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

“அவர்கள் நியமிக்கப்பட்டதிலிருந்து அந்த நேர்வுகளைக் குறைக்க என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள்? அவர்கள் என்ன அற்புதங்களைச் செய்தார்கள்? ஆதாரங்களைக் காட்டச் சொல்லுங்கள். நான் அதைப் பார்க்க விரும்புகிறேன்,” என்று நோர்லேலா மீண்டும் கூறினார்.

செப்டம்பர் 8-ம் தேதி, மாநிலத்தின் கோவிட் -19 தொற்றுக்கு எதிராகச் செயல்படுவதில் “அரசாங்கத்தின் விருப்பத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக” கூறி, நோர்லேலாவை “அப்பாவி” என லிம் விவரித்தார்.

பினாங்கு குடியிருப்பாளர்கள் கோவிட் -19 சிகிச்சை பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியதால், செப்டம்பர் 12-ம் தேதி, ‘திறனற்ற பார்வையாளர்’ என்று லிம் நோர்லேலாவை விவரித்தார்.

அக்டோபர் 3-ம் தேதி, பினாங்கில் கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையைக் குறைத்ததற்காக லிம் சிம்’மைப் பாராட்டினார்.

பினாங்கில், புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள், செப்டம்பர் 8-ம் தேதி உச்சத்தை அடைந்தன, அதன் பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.

நார்லேலா செய்தியாளர்களிடம், டிஏபி தலைவரின் நடத்தையால் மிகவும் ஏமாற்றமடைந்தேன் என்றார்.

“நான் இந்த ஒடுக்குமுறையாளர்கள், பெண்களைக் குறைத்து பேசுபவர்கள்,” என்று அவர் கூறினார்.

நோர்லேலாவுக்கும் டிஏபி பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்கனவே மோதல் வரலாறுகள் உள்ளன.

2017-ஆம் ஆண்டில், புங்கிட் மெர்தாஜாம், சுங்கை லெம்புவில் உள்ள சட்டவிரோத தொழிற்சாலை ஒன்றை ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை செய்ததை அடுத்து, “நன்றி, எம்ஏசிசி” என்று பாராட்டு தெரிவித்தமைக்குப் பினாங்கு அரசாங்க ஆதரவாளர்களால் நோர்லெலா விமர்சித்தார்.

சோதனையைத் தொடர்ந்து, பினாங்கு சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஃபீ பூன் போ எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டார், ஆனால் அந்த நேரத்தில் சுங்கை புயூ சட்டமன்ற உறுப்பினரான அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.