பெரியவர்களுக்கு 89.7 விழுக்காடு முழு தடுப்பூசி போடப்பட்டது

நேற்றிரவு (அக்டோபர் 9), இரவு 11.59 வரையில், மலேசியாவில் 89.7 விழுக்காடு அல்லது 21,003,074 பெரியவர்கள், கோவிட் -19 முழு அளவு தடுப்பூசியை நிறைவு செய்துள்ளனர், 0.3 விழுக்காடு மட்டுமே மீதமுள்ள நிலையில் 90 விழுக்காட்டை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கோவிட்நவ் (COVIDNOW) இணையதளத்தில் வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில், பெருயவர்களில் 94.7 விழுக்காடு அல்லது 22,176,018 பேர் குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று, 83,443 மருந்தளவு தடுப்பூசி – 8,236 முதல் மருந்தளவு, 75,207 இரண்டாவது மருந்தளவு – பெரியவர்களுக்குப் போடப்பட்டது.

இது பிப்ரவரி 24 முதல் தொடங்கப்பட்ட தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கான (பிக்) தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கையை 43,067,793 கொண்டுவருகிறது.

12 முதல் 17 வயது வரையிலான இளையர்கள், நேற்றைய நிலவரப்படி, 204,536 அல்லது 6.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முடித்துள்ளனர். அதே நேரத்தில், 71.5 விழுக்காட்டினர் அல்லது 2,248,867 பேர் குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

செப்டம்பர் 22-ம் தேதி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் 90 விழுக்காடு பெரியவர்கள் கோவிட் -19 தடுப்பூசியை முடித்தவுடன் மாநிலங்களுக்கு இடையேயான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

  • பெர்னாமா