5,434 புதிய நேர்வுகள், 112 நாட்களில் மிகக் குறைவு

சுகாதார அமைச்சு இன்று 5,434 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த நேர்வுகள் இப்போது 2,396,121.

இன்று பதிவாகியுள்ள புதிய நோய்த்தொற்றுகள் ஜூன் 28 முதல் 112 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும்.

அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சு மாநில வாரியான புதிய நேர்வுகளின் முறிவை அடுத்த நாள் கோவிட்நவ் வலைதளம் வழியாக மட்டுமே வெளியிடும்.

நேற்று (அக்டோபர் 17) பதிவான 6,145 புதிய நேர்வுகளின் எண்ணிக்கை மாநில வாரியாக பின்வருமாறு:

சிலாங்கூர் (1,036), ஜொகூர் (732), சரவாக் (730), கிளாந்தான் (572), சபா (504), பேராக் (461), பினாங்கு (438), கெடா (370), திரெங்கானு (319), பகாங் (305), நெகிரி செம்பிலான் (214), மலாக்கா (206), கோலாலம்பூர் (182), பெர்லிஸ் (51), புத்ராஜெயா (22), லாபுவான் (3).