சட்டவிரோதச் சூதாட்ட சிண்டிகேட்களிலிருந்து மாதாந்திரப் பணம் – சிலாங்கூர் எம்பி மறுப்பு

சிலாங்கூர் மந்திரி பெசார் (எம்பி) அமிருதீன் ஷாரி, மாநிலத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் சட்டவிரோதச் சூதாட்டச் சங்கங்களிலிருந்து “மாதாந்திரக் கொடுப்பனவுகளைப்” பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தார்.

ஓர் அறிக்கையில், அமிருதீன் கீச்சக உரிமையாளர் @edisi_siasatmy கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் விவரித்தார்.

“எந்த ஆதாரமும் இல்லாத, சட்டவிரோதச் சூதாட்ட சங்கங்களிலிருந்து மாதாந்திரப் பணம் பெறுவதில் என்னை இணைக்கும் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன்.

“குற்றச்சாட்டுகளை நான் கடுமையாக மறுக்கிறேன்,” என்று சிலாங்கூர் மாநிலத் தகவல் மையம் (PINS) நேற்று கீச்சகத்தில் பகிர்ந்த அறிக்கையில் அமிருதீன் கூறினார்.

சட்டவிரோதச் சூதாட்ட சிண்டிகேட்டிலிருந்து ஒரு மாதத்திற்கு RM150,000 பணம் பெறுவதாகவும், அப்பணத்தை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டிய கீச்சக உரிமையாளருக்கு அவர் பதிலளித்தார்.

அமிருதீனின் மறுப்பைத் தொடர்ந்து, அந்தக் கீச்சக கணக்கால் பெயரிடப்பட்ட மற்ற தரப்பினரிடமிருந்து இதே போன்ற மறுப்புக்காக காத்திருப்பதாக PINS கூறியது.

அமிருதீன் தவிர, கீச்சக உரிமையாளர், மூத்தக் காவல்துறை அதிகாரிகள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளின் (பிபிதி) அதிகாரிகளும் குற்றவாளிகள் என்றும் அவர்கள் சட்டவிரோதச் சூதாட்டக் குழுக்களைப் பாதுகாப்பதாகவும் கூறியுள்ளார்.

பதிலுக்கு, அமிருதீனின் மறுப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றும், எனவே சிலாங்கூர் மக்கள் தங்கள் பகுதியில் சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகளைக் கவனித்து கொள்ளும்படியும் கீச்சகக் கணக்கின் உரிமையாளர் @ edisi_siasatmy கூறியுள்ளார்.

“அவர் அதை மறுப்பார் என்று புலனாய்வு பதிப்புக்குத் (இ.எஸ். -Edisi Siasat) தெரியும், ஆனால் சிலாங்கூர் மக்களே, உங்கள் பகுதியைப் பார்த்து கொள்ளுங்கள், உங்கள் பகுதியில் இன்னும் சூதாட்ட மையம் இயங்குகிறதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

“உரிமம் இல்லாமல் சாலை ஓரத்தில், வயோதிக மாது ஒருவர் வியாபாரம் செய்தால், அமலாக்க அதிகாரிகள் விரைந்து வருவார்கள், ஆனால் இந்தச் சூதாட்ட மையங்களை அவர்கள் ஏன் பார்க்கவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த செப்டம்பர் முதல், கீச்சகக் கணக்கு நிர்வாகி, கையூட்டு வாங்கியதாகவும் குற்றச் செயல்களைப் பாதுகாப்பதாகவும் கூறப்படும் போலீஸ் அதிகாரிகள் உட்பட பல்வேறு சட்ட அமலாக்க நிறுகூவனங்களைக் குறிவைத்து வருகிறார்.

உள் மூலங்களிலிருந்து தகவல்களைப் பெற்றதாக அவர் கூறினார்.

மற்றவற்றுடன், முன்னாள் மலேசிய வெளிநாட்டியல் புலனாய்வு அமைப்பின் (MEIO) பொது இயக்குநர் ஹசானா அப்துல் ஹமீத் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக, எம்ஏசிசி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 6.94 மில்லியன் டாலர் பணம் காணாமல் போனதும் கீச்சக கணக்காளரால் தெரியவந்துள்ளது.

பண இழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளிவரவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.

அதிகார அத்துமீறல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக அதன் மூத்த அதிகாரிகள் மூன்று பேர் ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டதை எம்ஏசிசி பின்னர் உறுதிப்படுத்தியது.