ஜூன் 22-க்குப் பிறகு மிகக் குறைந்த தொற்று – 4,782 புதிய் நேர்வுகள்

கோவிட் -19 l சுகாதார அமைச்சு இன்று 4,782 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 2,436,498-ஆக உள்ளது.

இன்று பதிவான புதிய நோய்த்தொற்றுகள், ஜூன்-22 க்குப் பிறகு, 125 நாட்களில் பதிவான மிகக் குறைவானவை.

கடந்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் 10.6 விழுக்காடு குறைந்துள்ளது.

இருப்பினும், பல மாநிலங்களில் மருத்துவமனையில் அனுமதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, குறிப்பாக பினாங்கு (+34.0 விழுக்காடு), திரெங்கானு (+29.6 விழுக்காடு) மற்றும் கெடாவில் (+11.9 விழுக்காடு).

நேற்று (அக்டோபர் 24), மாநில வாரியாக 5,666 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன, அதன் எண்ணிக்கை பின்வருமாறு :

சிலாங்கூர் (1,078), சரவாக் (754), ஜொகூர் (566), சபா (502), கிளந்தான் (469), கெடா (421), பேராக் (349), பினாங்கு (279), திரெங்கானு (277), மலாக்கா (262), பகாங் (252), நெகிரி செம்பிலான் (218), கோலாலம்பூர் (162), பெர்லிஸ் (40), புத்ராஜெயா (30), லாபுவான் (7).