சரவாக் சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது

சரவாக் மாநிலச் சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 3-ம் தேதி கலைக்கப்பட்டது என்று இடைக்கால முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபேங் இன்று காலை தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி அமலுக்கு வந்த சரவாக்கின் அவசரநிலை பிரகடனத்தை,  யாங் டி-பெர்த்துவான் அகோங் முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது.

இது, நவம்பர் 3 முதல், 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல்கள் (பிஆர்என்) நடத்த வழி வகுக்கிறது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பை ஒரு செய்தியாளர் சந்திப்பில் அபாங் ஜோஹாரி வெளியிட்டார், இது இயங்கலையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

“உடல்நலம் மற்றும் பாதுகாப்புக் கருத்தாய்வுகள் மற்றும் பொதுச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்ற ஆலோசனையைப் பெற்று, யாங் டி பெர்த்துவா நெகிரி சரவாக் -உடன் கலந்தாலோசித்த பிறகு, அவசரநிலைப் பிரகடனத்தைத் திரும்பப் பெற அகோங்கின் ஒப்புதலுக்கு இணங்கியது; மற்றும் சரவாக் அரசியலமைப்பின் 21 (2) -வது பிரிவின் அடிப்படையில் சட்டத்தின் பிரிவு 3 (3) -உடன் இணைந்து படிக்கப்பட்டது; 3 நவம்பர் 2021 முதல் சரவாக் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக சரவாக் யாங் டி பெர்த்துவா நெகிரி அறிவித்தார்,” என்று அவர் கூறினார்.