11.11.99 – மலேசியாகினியை வெளியிட மகாதீர் எங்களுக்கு 9 நாட்கள் அவகாசம் கொடுத்தார்

11.11.99 | அந்த நேரத்தில் பெரும்பாலான மக்கள் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் – ஆனால் முருக்கை மென்று கொண்டு, ஓய்வெடுத்து கொண்டிருந்தவர்களில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுக்காக அல்ல.

தீபாவளி முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, மகாதீர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, 10-வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்தார்.

தீபாவளிக்கும் கிறிஸ்துமஸுக்கும் இடைப்பட்ட குறுகிய இடைவெளியில், தேர்தலை நடத்துவார் என்று பலர் எதிர்பார்க்கவில்லை, மேலும் அவர் தனது துணைத் தலைவர் அன்வார் இப்ராகிமைப் பதவி நீக்கம் செய்து, ஆசியப் பொருளாதார நெருக்கடியில் அவர் சிக்கியிருந்தார்.

தேர்தல் சூழலை மக்கள் இன்னும் இரசிக்கத் தொடங்காத… மத்திய அரசின் பட்ஜெட்டுக்கும் இன்னும் ஒப்புதல் பெறாத நிலையில் இது நடக்கத் தொடங்கியது.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், ஆயத்தங்களைச் செய்வதற்கு இன்னும் ஆறு மாதங்களாவது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறானது. அந்த நேரத்தில் மலேசியாகினி பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்திருந்தது. பயிற்சியில் இருந்த மூன்று பத்திரிகையாளர்களும் ஒரு வலை வடிவமைப்பாளர் மட்டுமே மலேசியாகினியின் ஊழியர்களாக இருந்தனர். அப்போதைய மலேசியாகினி இணையதளம் இப்படிதான் இருந்தது.

ஆரம்ப கட்டங்களில், நான் கப்சாய்யில் சவாரி செய்து, அடிக்கடி ஸ்டீவன் கானைச் சந்தித்து பேசுவேன். வெளிப்படையாக, நாங்கள் இன்னும் தயாராக இல்லை, எனவே தேர்தல் குறித்து அறிக்கையிடுவதற்கான வாய்ப்பை நாங்கள் இழக்கப் போகிறோமா? அல்லது நாம் சில அறிக்கைகளை எழுதி மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் அஞ்சல் பட்டியலை உருவாக்கலாமா?

ஒரு வருடத்திற்கும் மேலாக மலேசியாகினிக்கான விவாதங்கள், திட்டமிடல் மற்றும் நிதி சேகரிப்பு இருந்தபோதிலும், வலைத்தளத்தின் துவக்கம் உண்மையில் என்னை மிகவும் பதட்டப்படுத்தியது.

ஸ்டீவன் அதிக நம்பிக்கை கொண்டவர். தேர்தல் காலம், மலேசியாகினியைத் தொடங்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் நினைத்தார். சரியான நேரத்தில் அலுவலகம் மற்றும் இணையதளத்தை அமைக்க முடியுமா? சில தன்னார்வலர்களை நியமிக்கலாமா? நம் நண்பர்கள் உதவுவார்களா? இறுதியில், நாங்கள் எங்களால் முடிந்ததை வழங்க முடிவு செய்தோம்.

சில நாட்களுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் நவம்பர் 20-ஆம் தேதியை வேட்புமனுத் தினமாகவும், நவம்பர் 29 -ஆம் தேதியை வாக்களிக்கும் நாளாகவும் அமைத்தது – இது வரலாற்றில் மிகக் குறுகியத் தேர்தல் பிரச்சாரமாக அமைந்தது.

இணையதளம் உருவாக்கி அலுவலகம் அமைக்க சில நாட்களே இருந்தன. விண்டோஸ் 95-ஐப் பயன்படுத்தும் எச்.தி.எம்.எல். ஃபிரண்ட்பேஜ் மென்பொருளைப் பயன்படுத்தி இணையதளத்தை உருவாக்குவது எப்படி என்பதை இப்போதுதான் கற்றுக்கொண்டேன். ஸ்டீவன் மற்றும் வெப் டிசைனர் ஆகியோருடன் இணைந்து, நாங்கள் ஒன்றாக ஏதாவது ஒன்றை உருவாக்கினோம்.

நியமன நாளான நவம்பர் 20-ஆம் தேதி, எங்கள் நிருபரும் ஸ்டீவனும் பல செய்தி அறிக்கைகளை எழுதினர். 56k டயல் மோடத்தைப் பயன்படுத்தி, சில அறிக்கைகளைப் பதிவேற்றினோம். அந்தச் சில நிமிடங்களில் எந்த ஆரவாரமோ, கொண்டாட்டமோ இல்லாமல் பிறந்தது மலேசியாகினி!

நாங்கள் முன்னோடியாகச் செய்த மற்றும் தொடங்கப்போகும் பயணத்தைப் பற்றி உண்மையில் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் முன் பக்கத்தை வைத்திருக்கவில்லை, ஆனால் இணையக் காப்பகத்திற்கு நன்றி, இது 28 நவம்பர் 1999 அன்று மலேசியாகினி யின் முகம்.

மலேசியாகினி தனது முதல் ஸ்கூப்பைப் பெற அதிக நேரம் எடுக்கவில்லை. சீனச் செய்தித்தாள் சின் சியூ ஜிட் போ அன்வாரின் படத்திற்குப் பதிலாக, அப்துல்லா அஹ்மத் படாவியை ஒரு கூட்டு புகைப்படத் துண்டில் மாற்றியது, அந்த நேரத்தில் அவர்களின் தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தேசிய முன்னணி மேற்கொண்ட முயற்சியாக நாங்கள் அதைத் தெரிவித்தோம்.

அந்தச் செய்தித்தாள் ஆரம்பத்தில் அவர்களின் செயல்களை ஆதரித்தது, புகைப்படங்கள் தற்போதைய தலைமையைச் சித்தரிக்கிறது என்று வாதிட்டது. இருப்பினும், சீன மொழி செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் பின்னர் இந்தத் திருத்தத்திற்கு மன்னிப்பு கேட்டார் மற்றும் இது ஒரு பெரிய தவறு என்று விவரித்தார்.

மலாய் அம்னோ கட்சி இப்போது பிளவுபட்டிருப்பதற்கான தெளிவான அறிகுறிகளைக் காட்டி, மலேசியாகினி தேர்தல் அறிக்கையைத் தொடர்ந்தது. தேர்தல் இரவு, நவம்பர் 29 அன்று, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய ஊடகங்கள், மகாதீர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வசதியாக இருக்கும் வரை முடிவுகளை அறிவிப்பதைத் தாமதப்படுத்தின.

பிகேஆரும் சிறப்பாகச் செயல்பட்டதால், கிளாந்தானையும் திரெங்கானுவையும் கைப்பற்றியதன் மூலம், மறுமழர்ச்சி போராட்டத்தின் முகான்மைப் பயனாளியாக பாஸ் உருவானது என்று நாங்கள் அறிவித்தபோது, ​​வாசகர்கள் மலேசியாகினியின் பக்கம் திரும்பினர்.

இருப்பினும், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள், அவர்களின் முக்கியப் பிரமுகர்களான லிம் கிட் சியாங் மற்றும் கர்பால் சிங் ஆகியோரின் அதிர்ச்சி தோல்வியைக் காணும் அளவிற்கு மகாதீரையும் தேசிய முன்னணியையும் ஆதரித்தனர்.

அந்தப் புனிதமான தேதியிலிருந்து, மலேசியர்கள் தேர்தல் முடிவுகளுக்காக மலேசியாகினியை நோக்கி திரும்பியுள்ளனர்.

இந்தச் சனிக்கிழமை, நவம்பர் 20, மலேசியாகினியின் 22 -வது ஆண்டுவிழா.

மலேசியாகினி பற்றிய கூடுதல் செய்திகளுக்கு, அடுத்த வாரம் எங்களைப் பின்தொடரவும், ஒருவேளை நாங்கள் உங்களுக்கு சில ஆச்சரியங்களை வழங்கக்கூடும்!