‘மலேசியா ஆலோசகர்களை நியமிக்கும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது’

விமர்சனம் | பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு, சுகாதாரம், மதம் மற்றும் சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்து ஆலோசனை வழங்கும் மூன்று சிறப்பு ஆலோசகர்கள் இருப்பதாக பிரதமர் துறையின் அமைச்சர் அப்துல் லத்தீஃப் அஹமட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸலினா ஒத்மான் சைட், சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு ஆலோசகர், கெடா அம்னோ தலைவர் ஜமில் கிர் பஹரோம் மத விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகர், உலகச் சுகாதார அமைப்பின் (WHO) அறிவியல் மன்றக் குழு உறுப்பினரும் மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன்`னுமான டாக்டர் அடீபா கமருல்ஜமான் இஸ்மாயில் சப்ரியின் சிறப்பு சுகாதார ஆலோசகராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கான சிறப்பு ஆலோசகராக, முன்னாள் துணை சுகாதார அமைச்சர் ரோஸ்னா அப்துல் ரஷித் ஷிர்லின் உள்ளார்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி, இறுதியாக 31 அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்பு ஆலோசகர்களைக் கொண்டிருப்பதைக் காணும் மலேசியா, சிறப்பு ஆலோசகர்களை நியமிக்கும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறதா?

இந்த நிலைக்கு நாம் வரும்போது, ​​இனி வாராந்திர அமைச்சரவைக் கூட்டங்கள் தேவையில்லை, சிறப்பு ஆலோசகர்களின் வாராந்திரக் கூட்டங்களாக மாற்றினால் போதும்.

பிரதமரின் சிறப்பு ஆலோசகரைத் தற்போதுள்ள அமைச்சர் பதவிக்கு நியமித்தது என்ன நியாயம்? இது பிரதமரின் அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் மீதுள்ள நம்பிக்கையின்மையைக் காட்டுகிறதா?

அப்படியானால், அமைச்சரவையை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக சிறப்பு ஆலோசகர்களை நியமிப்பது நல்லது!

இஸ்மாயில் சப்ரியின் கீழ், இது ஒரு “குருட்டு சம்பள”த்திற்கான நியமனம் மட்டுமல்ல – எங்களிடம் “பயனற்ற” ஜி.எல்.சி. நியமனங்களும் உண்டு; குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஏற்கனவே தூதர்கள் உள்ளபோதும், சில குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சிறப்பு தூதர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், சவூதி அரேபியாவிற்குச் செல்ல முடியாத மத்திய கிழக்குக்கான பிரதமரின் விசேட தூதுவரும் நம்மிடம் இருக்கிறார்.

__________________________________________________________________________________

லிம் கிட் சியாங், இஸ்கண்டார் புத்ரி டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்