என்எப்சி: ஆடம்பர அடுக்குமாடி வீடுகளுக்கான ரொக்கம் எப்படி வந்தது எனப் போலீஸ் புலனாய்வு செய்கிறது?

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம், கோலாலம்பூர் பங்சார் பகுதியில் இரண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை கொள்முதல் செய்வதற்கு எப்படி 13.8 மில்லியன் ரிங்கிட்டை பெற்றது என்பதை உறுதி செய்ய போலீசார் முயன்று வருகின்றனர்.

அரசாங்கமும் என்எப்சி-யும் செய்து கொண்ட 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் ஒப்பந்தத்தின் கீழ், குத்தகையாளர்கள் பில் அனுப்பியதும் நிறுவனம் விலைப்பட்டியல் அல்லது பட்டுவாடா அளிப்பாணையை அரசாங்கத்துக்கு அனுப்பும். அதற்குப் பின்னரே பணம் கொடுக்கப்படும் என ஒரு வட்டாரம் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறியது.

“எடுத்துக் காட்டுக்கு என்எப்சி -யுடன் தொடர்புடைய குத்தகையாளர் ஒருவர் 20,000 ரிங்கிட்டுக்கு பில் கொடுத்தால் அந்த நிறுவனம் அதனை ஒர் அரசாங்க அமைப்புக்கு அனுப்ப வேண்டும். அந்த அமைப்பு பணத்தை விநியோகம் செய்யும்.”

“பணம் விநியோகம் செய்யப்படும் வழி அதுதான். அதுதான் வழக்கம் என்றால் அந்த இரண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளைக் கொள்முதல் செய்வதற்கான நிதிகள் எங்கிருந்து வந்தன என்பதை அறிய போலீஸ் விரும்புகிறது”, என அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

புத்ராஜெயாவில் 10வது பகுதியில் இரண்டு துண்டு நிலம் 3.3 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்பட்டது, மெர்சிடிஸ் பென்ஸ் CLS350 CGI ரக கார் 534,622 ரிங்கிட்டுக்கு வாங்கப்பட்டது, நெகிரி செம்பிலான், கெமாஸில் இன்னொரு துண்டு நிலம் வாங்கப்பட்டது ஆகியவற்றையும் போலீஸ் புலனாய்வு செய்வதாக கூறப்பட்டது.

“புத்ராஜெயாவில் நிலமும் மற்ற சொத்துக்கள் வாங்கப்பட்டது பற்றியும் அறிந்து கொள்ள நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.”

போலீஸ், என்எப்சி-யுடன் தொடர்புள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குத்தகையாளர்களிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்வதுடன் அவர்களிடம் உள்ள பத்திரங்களையும் சோதனை செய்யும் என வட்டாரம் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் தகவல் குறிப்பிட்டது.

கால்நடைகள், மாட்டிறைச்சி ஆகியவை திருட்டு போனது பற்றி என்எப்சி ஒராண்டுக்கு முன்பு போலீசில் புகார் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரம் குறிப்பிட்டது. அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட அறுவர் அந்தத் திருட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TAGS: