MACC தலைமை அதிகாரி அசாம் மீது விசாரணை – ஹம்சா

பல நிறுவனங்களில் பங்குகளை வாங்க தனது சகோதரர் தனது கணக்கைப் பயன்படுத்தியதாக எம்ஏசிசி தலைவர் அசாம் பாக்கி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான போலீஸ் புகாரைப் பெற்றதால் காவல்துறை விசாரணையைத் தொடங்கும்.

ஹரியான் மெட்ரோவின் அறிக்கையின்படி, உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின், அசாம் (மேலே) தற்போது செக்யூரிட்டீஸ் கமிஷன் மலேசியா சட்டம் 1993 இன் கீழ் விசாரிக்கப்படுகிறார் என்று தெரிகிறது.

இன்று ஹுலு லங்காட்டில் உள்ள தாமன் ஸ்ரீ நந்திங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு அடையாள ஆவணங்களை அளிக்கும்  போது அவர் செய்தியாளர் சந்திப்பில், “போலீஸ் புகார்கள்  உள்ளன, அதோடு வேறு குற்றங்கள் இருந்தாலும் அவை சார்பாகவும் நாங்கள் விசாரணையைத் தொடங்குவோம்,” என்று அவர் கூறினார்.

எம்ஏசிசியின் விசாரணை இயக்குநராக இருந்தபோது, ​​பங்கு சந்தையில்  பட்டியலிடப்பட்ட இரண்டு நிறுவனங்களில் லட்சக்கணக்கான பங்குகள் மற்றும் வாரண்டுகளை வைத்திருந்தார் என்பது வெளியிடப்பட்டதை தொடர்ந்து அசாம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அசாம் தனது சகோதரர் பங்குகளை வாங்க தனது கணக்கைப் பயன்படுத்தியதாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

இன்று முன்னதாக, பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த பல்வேறு எம்.பி.க்கள், அசாம் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) போலீஸ் புகார்செய்தனர்.

அவர்களில் லெம்பா பந்தாய் எம்பி ஃபஹ்மி ஃபட்சில், பெட்டாலிங் ஜெயா எம்பி மரியா சின் அப்துல்லா, சிம்பாங் ரெங்காம் எம்பி மஸ்லீ மாலிக் மற்றும் ஜொகூர் பாரு எம்பி அக்மல் நசீர் ஆகியோருடன் ஹராப்பான் இளைஞர்களின் பிரதிநிதியும் உடனிருந்தனர்.

“அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கு கணக்குகளை வைத்திருப்பது சார்பாக உள்ள விதிமுறைகளை இவர் மீறியுள்ளதாக தெரிகிறது.   இதன் அடிப்படையில் (சாத்தியமான மீறல்கள்) விசாரணையை நடத்துமாறு காவல்துறையிடம் கோரி இந்த போலீஸ் புகாரை நாங்கள் செய்கிறோம்,” என்று போலிஸ் தலையகத்திற்கு வெளியே ஃபஹ்மி  கூறினார்.

PKR கட்சியின் நாடாளுமன்ற உறுப்பிணரான இவர்,   மூன்று விதிமுறைகளிளின் கீழ், அதாவது,  Section 25, 25A and 29 of the Securities Industry (Central Depositories) Act 1991 (Sicda), Service Circular No 3 of 2002, and Section 10 Public Officers (Conduct and Discipline) Regulation 1993 – ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்படவேண்டும் என்கிறார்.

சிக்டாவின் (Sicda) பிரிவு 25,  பங்கு சந்தையில் திறக்கப்படும் ஒவ்வொரு  கணக்கும் டெபாசிட் செய்யப்பட்ட பங்கு பத்திரங்களின் பயனாளியின் பெயரிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நாமினியின் பெயரிலோ இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

அசாம், தனது அறிக்கையில் தனது பெயரில் உள்ள பங்குகள் தனது சகோதரருக்கு சொந்தமானவை என்று கூறியுள்ளார்.

பிரிவு 25 இன் கீழ் குற்றங்களுக்கு RM3 மில்லியன் வரை அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.