ஜனவரி 19 முதல் ராவுப்பில் (Raub) உள்ள கம்போங் பத்து தாலத்தில் (Batu Talam) EMCO

மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (EMCO) ஜனவரி 19 முதல் பகாங்கில் உள்ள கம்போங் பத்து தாலம், முகிம் பத்து தாலம் ஆகிய இடங்களில் விதிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி முகமட் சாட் (Rodzi Md Saad ) கூறுகையில், உள்ளூர் பகுதியில் கோவிட்-19 தொற்று குறித்து சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

ஃபேஸ்புக்கில் ஒரு அறிக்கையில், EMCO பிப்ரவரி 1 ஆம் தேதி முடிவடையும் என்று அவர் கூறினார்.