மலேசியா- தாய்லாந்து எல்லை விரைவில் திறக்கப்படும்

இரு நாட்டு மக்களின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் விமானம், நிலம் மற்றும் கடல், தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதையை (VTL), செயல்படுத்த மலேசியாவும் தாய்லாந்தும் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளன.

VTL மற்றும் டெஸ்ட் & கோ திட்டம் மூலம் விரைவில் எல்லையை மீண்டும் திறப்பதற்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) விவரங்கள் குறித்து தொடர்புடைய அமைச்சகங்கள் ஆலோசனை நடத்தும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

“தொடக்கமாக, கோலாலம்பூர் மற்றும் பெங்காக் இடையே முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு Air VTLஐ செயல்படுத்தலாம். எதிர்காலத்தில் மற்ற இடங்களைச் சேர்ப்பது குறித்தும் பரிசீலிப்போம்.”

“VTL திட்டம் புக்கிட் காயு ஹித்தாம் -சடாவோ (Bukit Kayu Hitam-Sadao) வழியாகவும், தீபகற்பத்தின் வடக்கே உள்ள அனைத்து CIQ என்ற குடியேறுதல் மற்றும் தனிமைப்படுத்தல், லங்காவி மற்றும் சாதுன் இடையே உள்ள SEA VTL வழியாகவும் விரிவுபடுத்தப்படும்.”

“இரு தரப்புக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வணிக வலையமைப்பைப் புதுப்பிக்க உதவும், குறிப்பாக சுற்றுலாத் துறையில்,” என்று அவர் பிரயுத் (Prayuth) உடனான ஒரு மாநாட்டில் கூறினார்.

பிரயுத் உடனான அந்த சந்திப்பில், இஸ்மாயில் சப்ரி, இரண்டு பிரதமர்களும் ரந்தாவ் பஞ்சாங்-சுங்கை கோலோக் இடையே இரண்டாவது பாலம் கட்டுவது குறித்தும், பெங்கலன் குபோர்-தக் பாய்க்கான விரைவுபடுத்தப்பட்ட புதிய பாலம் குறித்தும் விவாதித்ததாகவும் கூறினார்.

“இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் மற்றும் பொருட்களின் பட்டுவாடாவை எளிதாக்குவதற்கு தொடர்புடைய முகவர்கள் திட்டங்களின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

“அருகிலுள்ள அண்டை நாடுகளாக, மலேசியாவும் தாய்லாந்தும் பல்வேறு மட்டங்களில் நல்லுறவை ஏற்படுத்துவது முக்கியம், அதே நேரத்தில் புதிய ஒத்துழைப்புத் துறைகளை ஆராய்வது, குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளிலும்,” என்றார்.

மியான்மார் இராணுவப் புரட்சி

இஸ்மாயில் சப்ரி, தானும் பிரயுத்தும் மியான்மரின் நிலைமை குறித்தும் விவாதித்ததாக கூறினார்.

“மியான்மர் மற்றும் ஆசியான் சமூகத்தின் நலனுக்காக அமைதியான மற்றும் நீடித்த தீர்வைத் தேடுவதில் ஆசியான் தொடர்ந்து நேரிடையான மற்றும் ஆக்கபூர்வமான பங்கை வகிப்பது முக்கியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.” என்றார்.

மேலும், ஐந்து அம்ச கருத்தொற்றுமையை செயல்படுத்துவதில் மியான்மருக்கு ஒத்துழைப்பது முக்கியம் என்பதையும், ஆசியானின் நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். அதோடு மியான்மரில் ஜனநாயகம் திரும்பும் என நம்புவதாக கூறினார்.

இதற்கிடையில், இஸ்மாயில் சப்ரி APEC 2022 நடத்தும் தாய்லாந்து தலைவர் பிரயுத்துக்கு மலேசியாவின் வலுவான ஆதரவையும் தெரிவித்தார்.

“ஆண்டின் இறுதியில் நடக்கும் அபெக் உச்ச நிலை  மாநாட்டில் கலந்து கொள்ள தாய்லாந்து திரும்புவேன்” என்று அவர் கூறினார்.

1957 இல் மலேசியா சுதந்திரமடைந்ததில் இருந்து கடந்த 65 ஆண்டுகளாக மலேசியாவும் தாய்லாந்தும் சுமூகமான இராஜதந்திர உறவுகளை நிறுவியுள்ளன.