ஜோகூரின் புதிய எம்பி ஓன் ஹபீஸ்

பாரிசான் நேசனல் மாநிலத் தேர்தல்களில் அமோக வெற்றியைப் பெற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜோகூரின் 19வது மந்திரி பெசாராக ஓன் ஹபீஸ் காசி இன்று பதவியேற்றார்.

ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா புக்கிட் செரீனில், முன்னாள் பிரதமர் ஹுசேன் ஓனின் பேரனான ஒன் ஹபீஸ், ஜோகூரின் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் முன்னிலையில் பதவியேற்றார்.

ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமும் உடனிருந்தார்.

43 வயதான ஹபீஸ் மச்சாப் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 6,543 பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். முந்தைய பிஎன் தலைமையிலான மாநில அரசாங்கத்தில் இளைஞர்கள், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறைக்கான நிர்வாக கவுன்சிலராக ஹபீஸ் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 38 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து சட்டப்பூர்வ அறிவிப்புகளை பிஎன் சமர்ப்பித்தது, பெனூட் பிரதிநிதி ஹஸ்னி முகமது மாநிலத்தின் அடுத்த  மந்திரி  பெசாராக நியமிக்கப்படுவதற்கு தங்கள் ஆதரவைக் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மந்திரிபெசாரைத் தேர்ந்தெடுப்பதில் கூட்டணிக்கும் ஜோகூர் அரண்மனைக்கும் இடையே ஒரு இழுபறி நிலையில் இருந்ததாகவும் தெரிகிறது.

பாதுகாப்பு மந்திரி ஹிஷாமுடின் ஹுசைனின் மருமகனான ஓன் ஹபீஸ், அடுத்த மந்திரி பெசாராகக் தேர்ந்தெடுக்க படுவதாக வதந்திகள் பரவி வந்தன.

பெரித்தா ஹரியான் நேற்று வெளியிட்ட அறிக்கை, ஹஸ்னிக்கு பதிலாக ஒன் ஹபீஸ் வருவார் என்று யூகிக்க பட்டது. இருப்பினும், அம்னோவால் முன்மொழியப்பட்ட மூன்று பெயர்களில் அவரும் ஒருவர் என்றும், மற்ற இருவர் ஹஸ்னி மற்றும் அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி என்றும் மலேசியாகினி தெரிவித்திருந்தது.

அரண்மனையின் விருப்பமான தேர்வு ஓன் ஹபீஸ் என்று யூகங்கள் இருந்தன.

மே 2018 ல் நடந்த  பொதுத் தேர்தலில் அறிமுகமான ஹபீஸ், இரண்டாவது முறையாக லாயாங்-லாயாங் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர் ஆவார்.

 

-freemalaysiatoday