ஜாகிமின் முதல் பெண் டிஜியாக ஹக்கிமா நியமிக்கப்பட்டார்

ஹக்கிமா முகமது யூசுஃப் (Hakimah Mohd Yusoff), மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின்(Jakim) இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்று வரலாற்றில் இடம் பெருவார்.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் ஜூகி அலி (Mohd Zuki Ali), மார்ச் 21 முதல் நடைமுறைக்கு வரும் ஜாகிம் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரலின் (கொள்கை) நியமனம், அவரது 30 ஆண்டுகால சேவையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

“இந்த நியமனம், அரசுப் பணியில் முடிவெடுக்கும் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1990 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் (யுஎம்) இளங்கலைப் பட்டம் (ஹானர்ஸ்) மற்றும் 2001 இல் யுனிவர்சிட்டி புத்ரா மலேசியாவில் முதுகலைப் பட்டம் பெற்ற ஹக்கிமா, 1992 ஜாகிம் ஹலால் ஹப் பிரிவில்(Halal Hub Division) உதவி இயக்குநராக சிவில் சேவையில் சேர்ந்தார்.