எனது பேச்சு அரசியல் ஆதரவைக் கோருவற்காகா அல்ல – பிரதமர்

இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அஜெண்டா டெய்லி (Agenda Daily), பொறுப்பான பத்திரிக்கையை நடைமுறைப்படுத்தவில்லை, அதன் கட்டுரையில் அவர் பிரதம மந்திரியாக நீடிப்பதற்கான ஆதரவைக் கோரினார் என்று குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் , இந்த் பெர எம்பி (Bera MP) வாதிட்டார், ஜனவரி 29 அன்று தனது நாடாளுமன்றத் தொகுதியில் அவர் ஆற்றிய உரை அத்தகைய ஆதரவைக் கோருவதாக இல்லை என்றார்.

அம்னோ துணைத் தலைவருமானைவர், அவதூறான கட்டுரைக்காக அந்த  ஆன்லைன் செய்தி போர்ட்டல் மீது வழக்குத் தொடுத்தார். அது  ”இஸ்மாயில் சப்ரி மிகக்குறுகிய காலமே பிரதமராகிவிடுமோ என்ற கவலையில், ஆதரவைக் கோருகிறார்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தது.

முன்னதாக, செய்தி போர்ட்டலை இயக்கும் அஜெண்டா டெய்லி மீடியா எண்டர்பிரைஸின் உரிமையாளர் முகமட் இஸ்வான் முகமட் ஜூபிட், தனது வாத  அறிக்கையில் கட்டுரை தொடர்பாக தான் பொறுப்பான முறையான பத்திரிகையை  தர்மத்தை பின்பற்றியதாக கூறினார். .

வாதிக்கு ஆதரவாக நீதிமன்றம் ஒரு தடையுத்தரவை வழங்கியதைத் தொடர்ந்து, செய்தி இணையதளம், இந்த  வழக்கை முடிக்கும் வரை, கட்டுரையை அகற்றியுள்ளது.

வாதியின் பேச்சை தவறாக புரிந்து கொண்டார்

பிரதிவாதியின்  அறிக்கைக்கு இஸ்மாயில் சப்ரி அளித்த பதிலின் மூலம், தேவான் கொன்வென்சியன் மஜ்லிஸ் டேரா பேராவில்((Dewan Konvensyen Majlis Daerah Bera)  தான் அளித்த  உரையை தவறாக புரிந்து கொண்டதாக அவர் வாதிட்டார்.

அஜெண்டா டெய்லியின் எந்த ஒரு பத்திரிகையாளரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று வாதி தெரிவித்தார்.

இஸ்மாயில் சப்ரி, தனது பேச்சு குறித்து தெளிவுபடுத்துவதற்காக செய்தி இணையதளம் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை, மாறாக உள்ளூர் செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்திகளைக் குறிப்பிட்டு கட்டுரையை எழுதியதாகக் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட அறிக்கைகள் உண்மை மற்றும் ஆதாரமற்றவை அல்ல. வாதி எந்த அரசியல் கட்சியுடனும் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு ஒருபோதும் கெஞ்சியதில்லை.

“ஜனவரி 29, 2022 அன்று தேவான் கான்வென்சியன் மஜ்லிஸ் டேரா பேராவில் நடைபெற்ற செராமாவில் பிரதிவாதி கலந்து கொள்ளவில்லை,” என்று வாதி நம்புகிறார்.

வாதியின் அறிக்கைகள் தொடர்பான உறுதிப்படுத்தல் அல்லது விளக்கத்தைப் பெற பிரதிவாதி, வாதியைத் தொடர்பு கொள்ளத் தவறிவிட்டார்.

மார்ச் 12 ஆம் தேதி ஜொகூர் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காக இந்தக் கட்டுரை தீங்கிழைக்கும் வகையில் வெளியிடப்பட்டதாகவும் மனுதாரர் கூறினார்.

இந்த வழக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.