BN க்கு எதிரான போராட்டத்தில் ‘எந்த கட்சியுடனும் இணைந்து பணியாற்றுவோம்’ – முஹைடின்

பெர்சத்து வருகின்ற 15வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனலுக்கு எதிராக நேருக்கு நேர் போராடுவதை உறுதி செய்ய எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைக்க தயாராக உள்ளது.

அந்த நோக்கத்தை அடைய “வெற்றி-வெற்றி” என்கிற விதிமுறையை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட விவாதங்களில் கட்சி தற்போது ஈடுபட்டுள்ளதாக பெர்சத்து தலைவர் முஹைடின் யாசின் கூறினார்.

மலக்கா மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகளால் வாக்குகள் பிளவுபடுவதைத் தவிர்க்க அரசியல் கட்சிகளுக்கு இடையேயான புரிதல் முக்கியமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது, என்று பெரிகத்தன் நேஷனல் தலைவரான முஹைடின் கூறியுள்ளார்.

ஆரம்ப சந்திப்புகள் ஊக்கமளிக்கும் அறிகுறிகளைக் காட்டியபோதிலும், “மோதல்களைத் தவிர்பதற்குரிய புரிந்துணர்வு வகையை இதுவரை முடிவு செய்யவில்லை” என்று அவர் கூறினார்.

“எங்களின் நோக்கம் நாட்டுக்கு முக்கியமானது என்றால், மற்ற கட்சிகளின் தலைவர்களும் நம்முடன் இருக்க வேண்டும், இதற்கு அவர்கள் சாதகமான முடிவை காட்டியுள்ளனர், இதனை நுணுக்கமாக எப்படி செயல்படுத்துவது என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை,” என்று பெர்சதுவின் நோன்பு முடியும் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று, பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் சைபுடின் நசுதின் இஸ்மாயில், தேர்தல் ஒத்துழைப்பைப் பற்றி எந்த அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும் விவாதிக்கவும் கூட்டணி தயாராக இருப்பதாகக் கூறினார்.

PH தலைவர்கள் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று அமனாவின் துணைத் தலைவர் சலாஹுதீன் அயூப்பின் அறிக்கைக்கு இவ்வாறாக அவர் பதிலளித்தார். PN தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், பெரிகத்தன் நேஷனல் உடனான எந்தவொரு ஒத்துழைப்பையும் DAPயின் பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக், தற்பொழுது தள்ளுபடி செய்துள்ளார்.

-freemalaysiatoday