வருமான வரி வாரியம் BR1M பாரத்தின் போட்டோ பிரதிகளை ஏற்றுக் கொள்ளாது

BR1M என்ற ஒரே மலேசியா மக்கள் உதவி விண்ணப்ப பாரத்தின் போட்டோ பிரதிகளை வருமான வரி வாரியம் ஏற்றுக் கொள்ளாது.

அந்தத் தகவலை நிதித் துணை அமைச்சர் டாக்டர் அவாங் அடெக் ஹுசேன் இன்று வெளியிட்டார்.

இந்த மாதத் தொடக்கத்திலிருந்து விநியோகம் செய்யப்பட்டு வரும் அசல் பாரத்தைத் தாங்கள் பூர்த்தி செய்வதை உறுதி செய்து கொள்ளுமாறு அவர் விண்ணப்பதாரர்களைக் கேட்டுக் கொண்டார்.

அவர் கம்போங் அலோர் கானுவில் உள்ள விவசாயிகளுக்கு கருணைத் தொகையை வழங்கிய பின்னர் நிருபர்களிடம் அதனைத் தெரிவித்தார்.

அந்த பாரம் உண்மையானதா இல்லையா என்பதை உறுதி செய்வதற்கு தனது சொந்த வழி முறையை வருமான வரி வாரியம் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவான குடும்ப வருமானத்தைக் கொண்டவர்கள் பூர்த்தி செய்வதற்குப் போதுமான விண்ணப்ப பாரங்களள  அரசாங்கம் வெளியிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்வின் போது 56 விவசாயிகளுக்கு உதவி வழங்கப்பட்டது. அவர்களுடைய நெற்பயிர்கள் நோய்களினால் அழிந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு அந்த உதவி கொடுக்கப்பட்டது

பெர்னாமா