பல்கலைக்கழகத்தின் பராமரிப்பு பணிகள் கால அட்டவணை படி மேற்கொள்ளப்படுகின்றன -UUM துணைவேந்தர்

UUM மாணவியின் மரணத்தை அடுத்து கவனக்குறைவாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக உத்தர  மலேசியா UUM தனது வளாகம் சரியாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

“நடைமுறை மற்றும் அட்டவணையின்படி” பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன, என்று அதன் துணைவேந்தர், ஹைம் ஹில்மன் அப்துல்லா கூறியுள்ளார்.

வினோஸினி யின் குடும்பத்தினரை அவர்களது இல்லத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மே 21 அன்று,வினோசினி, 21,அவரது விடுதி அறையில் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் அலட்சியமாக இருப்பதாக அவரது தந்தை முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.

FMT