அம்னோ உச்ச கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15வது பொதுத் தேர்தலில் பெரிகத்தான் நேஷனல் (PN) சீட்டின் கீழ் தனது பாசிர் சலாக்(Pasir Salak) நாடாளுமன்றத் தொகுதியைப் பாதுகாக்க தாஜுதீன் அப்துல் ரஹ்மானை(Tajuddin Abdul Rahman) பாஸ் பேராக் அழைத்துள்ளது
மாநில பாஸ் ஆணையர் ரஸ்மான் ஜகாரியா, தாஜூதீன் (மேலே) BN தேர்தல் வேட்பாளராக கைவிடப்பட்டால் இது ஒரு சாத்தியமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்
PN கூட்டணியில் PAS க்கு பாசிர் சலாக் இடம் ஒதுக்கப்படுமா என்பதை பொறுத்தே உள்ளது என்றும் அவர் கூறினார்.
GE15 நடந்தால், தாஜுதீனுக்கு BNஇல் இடம் கொடுக்கப்படாவிட்டால், PASயை பிரதிநிதித்துவப்படுத்தும் PN இன் சீட்டில் அவரைப் போட்டியிட பேராக் PAS தயாராக உள்ளதாம்.
பாசிர் சலாக் அம்னோ பிரிவுத் தலைவராக உள்ள தாஜுடின், செவ்வாய்கிழமை அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் .
ஜூன் 21 தேதியிட்ட அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மட் மஸ்லான் எழுதிய கடிதத்தில் இந்த முடிவு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி , தாஜுதீன் நீக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிடவில்லை , அவர் என்ன தவறு செய்தார் என்பது அவருக்குத் தெரியும் என்றும் கூறினார்.
தாஜுதீன் உச்ச சபையிலிருந்து நீக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.
1995 ஆம் ஆண்டில், தாஜுதீன் ஒரு உச்ச சபை உறுப்பினராக இருந்தார், ஆனால் அம்னோ பிரிவுத் தலைவர் பதவியைப் பெறுவதற்காக அவர் ரிம6 மில்லியன் பணம் செலுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது கட்சி உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டார்.