சீர்திருத்த மசோதாக்களை வைத்து பேரம் பேசும் அரசியல்வாதிகள்

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் இஸ்மாயில் சப்ரி யாகோபின் அரசாங்கத்திற்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் இருகட்சிக் குழுவில் இருக்கும் ஃபஹ்மி(Fahmi), இந்த அமைப்பு நடவடிக்கை மலேசிய ஜனநாயகத்துடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்று விவரித்தார்.

“தாவல் எதிர்ப்புச் சட்டம், அது ஒரு பினாமிப் போர் போல ஆகிவிட்டது. இந்த மக்கள் வேறு ஏதோவொன்றுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் (மசோதாவை) தங்கள் கருவியாகப் பயன்படுத்தினர்”.

அவர்கள் உண்மையில் சட்டத்தின் விவரங்கள், கோட்பாடுகள் குறித்து போராடவில்லை, மாறாக சாக்குப்போக்காக வாதாமிடுகின்றனர்.

“ஒருவேளை அவர்களில் சிலருக்கு, இது ஒரு பேரம் பேசும் பொருள். ஆனால், என்னைப் பொறுத்தவரை, மலேசிய ஜனநாயகத்தை அப்படிப்பட்ட நிலையில் வைக்கக் கூடாது,” என்றார். மேலும் மலேசிய ஜனநாயகம் யாருடைய பேரம் பேசும் பொருளாகவும் இருக்கக்கூடாது என்று ஃபஹ்மி கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் பெர்சே மற்றும் பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் PKR தகவல் தலைவர் ஃபஹ்மி ஊடகங்களிடம் பேசினார். பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்ட ஒரு அமர்வில் மன்றத்தின் குழு பேச்சாளர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.

பெர்சத்துவை பிரதிநிதித்துவப்படுத்தும் Redzuan (Md Yusof) உடன் நாங்கள் பல சந்திப்புகளை நடத்தியுள்ளோம். இது அரசாங்கத்திற்கும் ஹராப்பானுக்கும் இடையில் அல்ல, மாறாக அரசாங்கத்தின் தரப்பிலே மிகவும் பதட்டமாக உள்ளது.

வெளியே பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “சண்டையில்” ஈடுபட்டுள்ள அரசியல் நடிகர்கள் பற்றி அதிகம் வெளிப்படுத்த ஃபஹ்மி ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அது ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் தற்போதைய அரசியல் கொந்தளிப்புடன் தொடர்புடையது என்று சூசகமாக தெரிவித்தார்.

பிரதமரின் பதவிக் காலத்தை கட்டுப்படுத்துதல்

இஸ்மாயில் சப்ரி நிர்வாகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹராப்பானுடன் ஒரு சீர்திருத்த உடன்படிக்கையை எட்டியது, இது மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை என்று அழைக்கப்பட்டது,

பிரதம மந்திரியின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் வகையில், தாவல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தம் உள்ளிட்ட சீர்திருத்தங்களை முன்வைக்கும் வாக்குறுதியை இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.

எனினும், தாவல் எதிர்ப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் திட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற அமர்வில் அதை தாக்கல் செய்வது சமீபத்திய இலக்கு.

ஃபஹ்மி மற்றும் மற்றொரு பேச்சாளரும், DAPயின் Kluang MP, Wong Shu Qiயும், ஒரு பிரதமரின் பதவிக்காலம் ஒரு குறிப்பிட்ட வரம்பில் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்தனர்

ஒரு பிரதம மந்திரி பதவியில் நீண்ட காலம் பணியாற்ற அனுமதிப்பது தனிநபரை “அதிகமான மற்றும் மிகையான அதிகாரங்களை” கொண்டிருக்கச் செய்யும் என்று வோங் கூறினார்.

நமது பிரதமர் எப்படியோ மிகவும் சக்திவாய்ந்தவராக மாறுகிறார், நிறைய பேர் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் பிரபலமானவராகவும், நன்கு விரும்பப்பட்டவராகவும் இருந்தாலும், மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தாலும், கடவுளைப் போல பரிபூரணமான மனிதர் யாரும் இல்லை, அந்த நபர் எவ்வளவு விரும்பப்பட்டாலும், அவர்கள் பெரும்பாலும் சிறந்தவர்கள் அல்ல, “என்று அவர் கூறினார்.