பக்கா திருடன் ஜோ லோ-வின் சமரச முயற்சியை அரசு நிராகரித்தது

தலைமறைவான தொழிலதிபர் லோ டேக் ஜோ தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கத்துடன் ஒரு தீர்வை எட்ட முயற்சித்ததை அட்டர்னி ஜெனரலின் அலுவலகம் (AGC) இன்று உறுதிப்படுத்தியது.

இருப்பினும், ஜோ லோவின் அனைத்து தீர்வு வழிமுறைகளும் AGC ஆல் நிராகரிக்கப்பட்டன.

பெயர் குறிப்பிடப்படாத பிரதிநிதி மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக AGC தெரிவித்துள்ளது.

“இந்த முயற்சிகளில், லோவின் பிரதிநிதி AGC உட்பட பல அரசு நிறுவனங்களையும் சந்தித்தார்.

“ஜோவின் பிரதிநிதி வழங்கிய அனைத்து தீர்வு வழிமுறைகளும் AGC ஆல் நிராகரிக்கப்பட்டது,” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜோ லோ என்றும் அழைக்கப்படும் லோ, 40, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு RM1.5 பில்லியன் வழங்குவதாகக் கூறப்பட்டதாக நேற்று தி எட்ஜ், செய்தி வெளியிட்டது.

முன்னாள் அட்டர்னி ஜெனரல் மொஹமட் அபாண்டி அலி அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் லோவை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது. இது தொடர்பாக மலேசியாகினி வினவிய  கேள்விகளுக்கு அபாண்டி இன்னும் பதிலளிக்கவில்லை.

லோ 1எம்டிபி ஊழலின் பின்னணியில் அதன் காரணகர்த்தாவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறார், மேலும் அவர் அமெரிக்க மற்றும் மலேசிய நீதிமன்றங்களில் ஆஜராகாததாகவுக்கும் குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரைக் கண்டுபிடித்து நாடு கடத்த போலீசார் முயற்சி செய்தும் அவர் இருக்கும் இடம்  தெரியவில்லை. ஆனால்அவர் சீனாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில், அமெரிக்க நீதித்துறை, மலேசிய அரசு சொத்து நிதியிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்ய சதி செய்ததாகவும், அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியும் சதி செய்ததாகவும் குற்றம் சாட்டியது.

மலேசியாவில், அவரும் அவரது கூட்டாளிகளும் அமெரிக்க டாலர் 1.03 பில்லியன் பணமோசடிக்காக ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

அவர் தனது உதவியாளர் எரிக் தான் கிம் லூங்குடன் 125.97 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பணமோசடி குற்றச்சாட்டையும் எதிர்கொள்கிறார்.

2020 ஆம் ஆண்டில், லோ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக MACC மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்தது, இந்த முறை முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தனது பதவியைப் பயன்படுத்தி மொத்தம் RM 60,629,839.43 லஞ்சம் பெறுவதற்கு ஒரு குற்றவியல் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

லோ மீண்டும் மீண்டும் தான் நிரபராதி என்று கூறி, 2020 இன் நேர்காணலில் தான் 1MDBயின் பரிவர்த்தனைகளில் ஒரு இடைத்தரகர் மட்டுமே என்று கூறியுள்ளார்.