தொழிலாளர் ஆட்சேர்ப்பு ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் – இந்தோனேசிய தூதர்

மலேசியாவிற்கு தொழிலாளர்களை அனுப்புவதில் இந்தோனேசிய முடக்கம் பற்றி விவாதிக்க இன்று  நடைபெறும் மலேசிய அமைச்சர்களின் கூட்டத்தில் இந்தோனேசியா ஒரு விஷயத்தை மட்டுமே எதிர்பார்க்கிறது என தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 அன்று இரு நாடுகளும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிட்ட இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ “எங்கள் நிலைப்பாடு எளிமையானது மற்றும் தெளிவானது; இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மலேசியா மதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புதாக , ”கூறினார்.

மலேசிய குடிவரவுத் துறையின் பணிப்பெண் இணையசேவை முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தோனேசியா அதனுடைய பணிப்பெண்கள் மற்றும் பிற தொழிலாளர்களை மலேசியா ஆட்சேர்ப்பு செய்வதை முடக்கியுள்ளது, இது சுற்றுலா விசாக்களை பணி அனுமதிகளாக மாற்ற அனுமதிக்கிறது என்று அவர் கூறினார்.

ஹெர்மோனோ இந்த அமைப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் “புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளும் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது” என்று கூறினார்.

அனைத்து விண்ணப்பங்களும் அங்கீகாரமும் இந்தோனேசிய தூதரகத்தின் ஊடாகச் செல்லும் ஒன் சேனல் சிஸ்டத்தைப் பயன்படுத்துமாறு இந்தோனேசியா வலியுறுத்தியுள்ளது, இது அதன் பணிப்பெண்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், துன்பப்படுத்துதல் அல்லது அடிமைப்படுத்துவதை தடுக்கவும் அனுமதிக்கிறது.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அறிவுறுத்தலின் பேரில் மனிதவள அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இரு அமைச்சகங்களும் நாளை சந்திக்கும் என மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்திருந்தார்.

இஸ்மாயில் மற்றும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர் சாட்சியாக சரவணனும் அவரது இந்தோனேசியப் பிரதிநிதியும் ஏப்ரல் மாதம் ஜகார்த்தாவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

-FMT