அன்வார்: மடமாளிகையில் இருந்து மத்திய சிறையில் நஜிப்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்கிறார், கிட்டத்தட்ட ஒரு தசாப்தகால சிறைவாச அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்று, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

அன்வார் மேலும், நஜிப் தனது இரண்டு சிறைத் தண்டனைகளின்போது சிகிச்சை மற்றும் வசதிகளைப் பெறக்கூடும் என்கிறார். ஆனால் நஜிப்பின் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டால் இது போதுமானதாக இருக்காது என்றும் கூறினார்.

“என்னுடைய பழைய சக சிறை அதிகாரிகளிடமிருந்து நான் புரிந்துகொண்டதிலிருந்து, நஜிப்புக்கு ஓரளவு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும் என்று நினைக்கிறேன் (அவருக்கு) சில வசதிகள் வழங்கப்படும்.”

ஆனால், சிறை என்பது ரோஜா பூக்களின் படுக்கை அல்ல.

“குறிப்பாக ஏழு நட்சத்திர ஹோட்டலில் அளவில் இருந்த அவரது தற்போதைய வாழ்க்கை முறையுடன் ஒப்பிடும்போது சிறை மிகவும் கடினமானது,” என்று நஜிப்பின் சிறை தண்டனைகுறித்து கருத்து தெரிவிக்குமாறு CNBCக்கு அளித்த பேட்டியில் அன்வார் கூறினார்.

முன்னாள் துணைப் பிரதமரான அன்வார், 1999 ஆம் ஆண்டில் டாக்டர் மகாதீர் முகமதுவின் நிர்வாகத்தின்போது நான்கு ஊழல் தொடர்பான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்தார்.

2015 ஆம் ஆண்டில், அன்வார் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார், இந்த முறை நஜிப்பின் நிர்வாகத்தின்போது, அவரது முன்னாள் உதவியாளர் முகமது சைஃபுல் புகாரி அஸ்லானை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டப்பட்டார். பின்னர், அவர் 2018ஆம் ஆண்டில் அரச மன்னிப்பைப் பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அன்வாரின் அனுபவம்

தனது அனுபவத்தை நினைவுகூர்ந்த போர்ட் டிக்சன் எம்.பி., மகாதீர் காலத்தில் தனது முதல் பதவிக் காலம் “மிகவும் கடினமானது” என்று கூறினார், அவர் சிறைவாசத்தின் ஆரம்ப கட்டத்தில் புத்தகங்கள் மற்றும் குடும்பத்தினர் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

“நஜிப் (நிர்வாகம்) கீழ் கூட, என் முதுகுப் பிரச்சனை அல்லது எனது வயதைக் கருத்தில் கொள்ளாமல், தரையில் பல வாரங்களாகத் தூங்கும் சாதாரண கட்டுக்குள் தள்ளப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.

செவ்வாயன்று, 2009 முதல் 2018 வரை நாட்டின் ஆறாவது பிரதமராகப் பணியாற்றிய நஜிப், SRC International Sdn Bhd. இல் இருந்து ரிம 42 மில்லியன் நிதியுடன் தொடர்புடைய ஏழு குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் உச்ச நீதிமன்றம் அவரது குற்றவியல் தண்டனைகளை உறுதிப்படுத்திய பின்னர், அவரது 12 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிப்பதற்காகக் கஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

தலைமை நீதிபதி, தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு ஒருமனதாகத் தீர்ப்பளித்தது. 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் RM210 மில்லியன் அபராதம் ஆகியவற்றை உறுதி செய்தது.