நாட்டின் எதிர்காலத்திற்காக GE15 இல் எதிர்க்கட்சி உடன்படிக்கைக்கு அழைப்பு – முகைடின்

அரசியல் ஒத்துழைப்பு மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் பரிசீலிக்க வேண்டும் என்ற பெரிகத்தான் நேசனலின் (PN) அழைப்பு, மலேசியாவின் எதிர்காலம் மற்றும் அதன் மக்களின் நலன்களுக்காகவே செய்யப்பட்டதே தவிர கூட்டணிக்காக அல்ல என்று அதன் தலைவர் முகைடின் யாசின் நேற்று கூறினார்.

மேலும் நாட்டை, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று முன்னாள் பிரதமர் கூறினார்.

“இந்த அழைப்பு தற்போது மக்கள் எழுப்பியுள்ள கவலைகளிலிருந்து எழுகிறது. இது PN இன் அரசியல் நலன்களுக்காகவோ அல்லது 15 வது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ செய்யப்படவில்லை,” என்று முகைடின் (மேலே) இன்று NRC கூட்டத்திற்கு தலைமை தாங்கியபின்னர் கூறினார்.

சனிக்கிழமையன்று PN மாநாட்டில் தனது உரையில், GE15 இன் போது PN உடனான ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முகைதின் அழைப்பு விடுத்தார்.

PN ஆனது Bersatu, PAS, Gerakan, Parti Solidariti Tanah Airku (Star) Sabah, and Sabah Progressive Party (SAPP) ஆகியவற்றை உள்ளடக்கியது.

பக்காத்தான் ஹராப்பான் PN உடன் ஒத்துழைக்காது என்ற ரஃபிஸி ராம்லியின் அறிக்கைகுறித்து கேட்கப்பட்டதற்கு, பெர்சத்து தலைவராக இருக்கும் முகைடின், இது PKR துணைத் தலைவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

“நான் இதுவரை பார்த்ததில், ஒத்துழைப்பை நிராகரிப்பவர் ரஃபிஸி மட்டுமே. பரவாயில்லை, அவரது கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இருப்பினும், அரசியல் ஒத்துழைப்பு கட்சிகளை ஒன்றிணைத்து மக்களுக்குச் சிறந்ததை வழங்க முடியும், “என்று அவர் கூறினார்.

GE15 இல் போட்டிகளை எதிர்கொள்ளும் சாத்தியம் உட்பட, நிகழ்வுகளை எதிர்கொள்ளப் பெர்சத்து தயாராக இருப்பதாக முகைடின் கூறினார்.