நான் அக்கால்புடி நிதியைத் தனிப்பட்ட நலனுக்காகப் பயன்படுத்தவில்லை – ஜாஹிட்

யயாசன் அக்கால்புடி நிதியை அதன் நிறுவனராக இருந்தும் தனிப்பட்ட நலனுக்காகத் தவறாகப் பயன்படுத்தவில்லை என்று அஹ்மத் ஜாஹிட் ஹமிடி நேற்று(30 கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த அறக்கட்டளையின் நிதியானது, குறிப்பாணை மற்றும் சங்க விதிகள் (M&A) அல்லது அக்கால்புடியின் நோக்கங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த அறக்கட்டளையின் நிதியைத் தனிப்பட்ட நலனுக்காக என்னால் பயன்படுத்த முடியாது என முன்னாள் துணைப் பிரதமர் கூறினார்.

அககால்புடியைச் சேர்ந்த பல மில்லியன் ரிங்கிட்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல் (CBT), ஊழல் (8) மற்றும் பணமோசடி (27) ஆகிய 47 குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது வழக்கறிஞர் ஹமிடி முகமது நோவின் மறுவிசாரணையின்போது ஜாஹிட் இவ்வாறு கூறினார்.

RM6 மில்லியன் காசோலையைப் பற்றி (Datasonic Group Berhad இன் முன்னாள் துணை நிர்வாக இயக்குநர்) Chew Ben Ben மூலம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதா என்று அவரது மற்றொரு வழக்கறிஞர் அஹ்மத் ஜைதி ஜைனால் எழுப்பிய கேள்விக்கு, ஜாஹிட் இது ஒரு அரசியல் பங்களிப்பு என்று கூறினார்.

முந்தைய விசாரணையின்போது, 69 வயதான ஜாஹிட், தான் துணைப் பிரதம மந்திரியாக இருந்தபோது சியு (Chew) என்பவரிடமிருந்து பெற்ற ரிம6 மில்லியன் காசோலைகள் அரசியல் பங்களிப்புக்கள் என்றும் இலஞ்சம் அல்ல என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிபதி Collin Lawrence Sequerah  முன் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை தொடர்கிறது.