M40 குழுவிற்கான PTPTN கடன் 100% ஆக அதிகரிப்பு – பிரதமர்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று M40 (M1) குழுவில் உள்ள மாணவர்களுக்கான National Higher Education Fund Corporation  (PTPTN) கடன் 75% இருந்து 100% உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

M40 குழுவில் உள்ள PTPTN கடன் வாங்கியவர்களுக்கு மடிக்கணினிகளை வாங்குவதற்கு கடன்களை வழங்கவும் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

மலேசியக் குடும்ப மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

“என்னை நம்புங்கள், அரசாங்கம் எப்போதும் மாணவர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்கிறது. அவர்களுக்குப் பயனளிக்கும் இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்படும், “என்று கோலாலம்பூரில் உள்ள Universiti Pertahanan Nasional Malaysia (UPNM) பல்கலைக்கழகத்தில் இன்று Semarak Patriotik IPT 2022 ஐ திறந்து வைத்தபோது அவர் கூறினார்.

உயர்கல்வி அமைச்சர் நோரைனி அகமது(Noraini Ahmad), பிரதமரின் துறை அமைச்சர் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) மாக்ஸிமஸ் ஓங்கிலி(Maximus Ongkili), அரசின் தலைமைச் செயலாளர் முகமது சுகி அலி(Mohd Zuki Ali) மற்றும் மலேசிய ஆயுதப் படைகளின் தலைவர் அஃப்பென்டி புவாங்(Mohd Zuki Ali) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களிடையே அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மலேசிய குடும்ப மலிவான விற்பனைத் திட்டம் அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் (IPT) நடத்தப்படும் என்று நோரைனி தெரிவித்ததாகவும் பிரதமர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்பியவர்கள் நாட்டைக் காலனித்துவவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக எவ்வாறு போராடினார்களோ, அதே போன்று நாட்டின் சுதந்திரத்திற்கு அர்த்தமூட்டுவதற்காகத் தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களாக முக்கிய பங்காற்றுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் சுயஅடையாளம், கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி அழைப்பு விடுத்தார்.

நாட்டின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக மலாய் மொழியை நிலைநிறுத்தவும் அவர்கள் உறுதியளிக்க வேண்டும் என்றார்.

தேசபக்தி உள்ளம்

உயர் கல்வியின் சூழலில், மாணவர்கள் தங்கள் தேசபக்தி உணர்வை வெளிப்படுத்த வழிகள் உள்ளன என்று பிரதமர் கூறினார்.

மிக முக்கியமாக, பலதரப்பட்ட மலேசியக் குடும்பங்களுக்கிடையேயான உறவைத் தொடர்ந்து வலுவாக இருப்பதை உறுதிசெய்வதில் அவர்கள் அரணாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், தேசியவாதம் குறித்த பல்வேறு தளங்கள்மூலம் மாணவர்கள் நாட்டின் மீதான அன்பை எப்போதும் வளர்க்க வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

உயர்கல்வியின் பின்னணியில் பிரதமரின் கூற்றுப்படி, தேசபக்தி உணர்வை வெளிப்படுத்துவதற்கு பல வழிகள் மற்றும் விஷயங்கள் உள்ளன, மேலும் இந்த நேரத்தில் மாணவர்களின் மிக முக்கியமான போராட்டம் பன்மை மலேசிய உறவை உறுதி செய்வதில் வலுவான கோட்டையாக இருக்க வேண்டும்.

இதற்கிடையில், இஸ்மாயில் சப்ரி கூறுகையில், மாணவர்களிடையே நாட்டை நேசிக்கும் உணர்வு தொடர்ந்து மெருகூட்டப்பட்டு, தேசியவாதத்தின் பல்வேறு வழிகளில் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

“IPT இல் செயல்படுத்தப்படும் பொதுப் பாடங்கள் அல்லது MPU, மலேசியாவில் உள்ள பல இன சமூகத்தின் நெறிமுறைகள் மற்றும் நாகரீகத்தின் மீதான அனைத்து மாணவர்களின் பாராட்டையும் வலுப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

நாட்டின் சுதந்திரத்திற்கு தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு சான்றாக, அறிவாற்றலுடன், உன்னத ஆளுமையுடன் தங்களை தயார்படுத்திக்கொள்ள மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் இஸ்மாயில் சப்ரி.

இன்றைய நிகழ்ச்சித் திட்டத்தின் கருப்பொருளான “Mahasiswa Patriotik Keluarga Malaysia” என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தின் கோட்டையாகத் தேசபக்தியின் வேகத்தை மாணவர்களால் உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற உறுதியான உறுதியுடன் ருகுன் நெகாராவின் ஐந்து கொள்கைகளைக் கடைபிடியுங்கள், வெளிப்புற கூறுகள் நமது ஒற்றுமையில் குறுக்கிடக் கூடாது”.

“நமது அன்புக்குரிய மலேசியாவிற்கு மிகவும் புகழ்பெற்ற எதிர்காலத்தை நனவாக்க கைகோர்ப்போம், மேலும் ஜாலூர் ஜெமிலாங் எப்போதும் மேடையில் கம்பீரமாகப் பறக்கும் என்பதை உறுதி செய்வோம்,” என்று அவர் கூறினார்.