பல மாநிலங்களில் இடி, மற்றும் பலத்த காற்றுடன் கனமழை 

பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியாதெரிவித்துள்ளது.

சிலாங்கூரில் உள்ள பகுதிகளில் கிளாங், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் செபாங் ஆகியவை பாதிக்கப்படும் என்று மெட்மலேசியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நெகிரி செம்பிலானில், செரம்பன், போர்ட் டிக்சன், கோலா பிலா, ரெம்பாவ் மற்றும் டாம்பின் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜொகூரில், தாங்காக், மூவார், பத்து பஹாட், க்ளுவாங், மெர்சிங், போண்டியன், குலாய், கோட்டா டிங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களுக்கு மோசமான வானிலை கணிக்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயா மற்றும் மேலாகாவிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

-FMT