ஜாஹிட் தலைவரானால் அம்னோ அதிக இடங்களை இழக்கும் – மகாதீர்

கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவர் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதால், அடுத்த பொதுத் தேர்தலில் அதிக இடங்களை அம்னோ இழக்க நேரிடும் என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

முன்னாள் அம்னோ தலைவர், சமீபத்திய தேர்தல்களின் போது கட்சியின் செயல்திறன் மோசமாகிவிட்டதாகக் கூறினார், ஏனெனில் அது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் காட்டப்பட்ட அல்லது உணரப்பட்டவர்களால் வழிநடத்தப்பட்டது.

அம்னோவின் தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியைத் தடுக்கும் முடிவைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவரால்  கட்சி தொடர்ந்து வழிநடத்தப்படும் என்று மகாதீர் கூறினார்.

யயாசன் அகல்புடி நிதியில் 31 ரிங்கிட் மில்லியனுக்கும் மோசடி  குற்றம் சாட்டப்பட்ட அஹ்மத் ஜாஹிட் ஹமிடியை அவர் குறிப்பிட்டு இவ்வர்று தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில், அம்னோ அதிக இடங்களை இழக்கும் சாத்தியம் அதிகம் என்று, 2016ல் அம்னோவில் இருந்து விலகிய மகாதீர் ஒரு அறிக்கையில் கூறினார்.

15வது பொதுத் தேர்தலில், அம்னோ 26 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

 

-FMT