ஒவ்வொரு மாதமும், பொறுப்பற்ற நபர்களால் குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்தப்படும் ஜொகூரில் உள்ள சுங்கை தெப்ராவ்(Sungai Tebrau) மற்றும் சுங்கை ஸ்குடாய்(Sungai Skudai) ஆகியவற்றிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்தால் சுமார் 160 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
சுற்றுலா, சுற்றுச்சூழல், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கான மாநில நிர்வாகக் கவுன்சிலர் கே.ராவன் குமார் கூறுகையில், “வழக்கமான துப்புரவு இருந்தபோதிலும், குப்பையின் அளவு அப்படியே உள்ளது”.
“ஒவ்வொரு மாதமும் முறையே சுங்கை ஸ்குடாய் மற்றும் சுங்கை டெப்ராவிலிருந்து சேகரிக்கப்பட வேண்டிய 80 டன் குப்பைகள் உள்ளன, தவறாமல் சுத்தம் செய்யப்பட்டாலும் கூட, எண்ணிக்கை மாறவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம்”.
“சேகரிக்கப்பட்ட குப்பைகளில் படுக்கைகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் அடங்கும்,” என்று அவர் நேற்று பாசிர் கூடாங்கில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்பு திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் இரண்டு ஆறுகளிலும் துப்புரவு படகுகள்மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் இந்த விவகாரம்குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஆறுகளில் மக்கள் குப்பைகளை வீசுவதைக் கண்டால் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நதி மாசுபாடு அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு பணிக்குழு மூலம் அமலாக்கம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஞாயிறன்று, தெரு, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டம் 1974 (சட்டம் 133) இன் கீழ் குப்பைகளை அகற்றுவதற்கான அமலாக்கத்தை மாநில அரசு தீவிரப்படுத்தும் என்று ஜொகூர் மந்திரி பெசார் ஒன் ஹாஃபிஸ் காஸி(Onn Hafiz Ghazi) கூறினார்.
இச்சட்டத்தின்படி, பொது இடத்தில் வேண்டுமென்றே குப்பை கொட்டுவது கண்டறியப்பட்டால், முதல் அபராதம் அதிகபட்சம் 500 ரிங்கிட் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

























