புதிய குடியிருப்பு பகுதிகளில் சோலார் பேனல்களை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்

சரவாக் அரசு புதிய குடியிருப்பு பகுதிகளில் சோலார் பேனல்களை நிறுவுவதை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகப் பொதுப் பயன்பாடுகள் (மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு) துணை அமைச்சர் அப்துல் ரஹ்மான் ஜுனைடி(Rahman Junaidi) தெரிவித்தார்.

தி போர்னியோ போஸ்ட்டின் படி, ரஹ்மான் (மேலே) சரவாக் வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்துடன் (Sheda) இந்த விஷயத்தை அரசாங்கம் விவாதித்ததாகக் கூறினார்.

“இந்த யோசனையைப் பிரதமர் அபாங் ஜொஹாரி ஓபன் மாநில வீட்டுவசதி அமைச்சராக இருந்தபோது முன்வைத்தார். இந்த யோசனையை ஆரம்ப கட்டத்தில் முன்வைக்க ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் இருந்தேன்”.

“சமீபத்தில், புத்ராஜெயா மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்படுத்தப்பட்ட ஃபீட்-இன் டாரிஃப் (Feed-In Tariff (FIT)) திட்டத்தில் சரவாக் எனர்ஜி(Sarawak Energy) பங்கேற்றது. இதை முறையாகச் செயல்படுத்தலாம். இதற்குச் சரவாக் எனர்ஜியின் பங்கு மற்றும் சொத்து உருவாக்குநர்கள் மற்றும் பிற தரப்பினரும் தேவை”.

“ஒருவேளை எதிர்காலத்தில், பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, புதிய வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ய எங்கள் (தற்போதுள்ள) வீட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்யலாம்,” என்று அவர் கூறினார்.

கடந்த டிசம்பரில், ஜப்பானில் உள்ள டோக்கியோ பெருநகர சட்டசபை ஏப்ரல் 1, 2025 க்குப் பிறகு கட்டப்பட்ட அனைத்து புதிய வீடுகளுக்கும் சோலார் நிறுவலைக் கட்டாயமாக்கியது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) 2030 ஆம் ஆண்டிற்குள் சூரிய ஆற்றலை மிகப்பெரிய ஆற்றல் மூலமாக மாற்றுவது மற்றும் புதைபடிவ ஆற்றல் ஆதாரங்களில் ரஷ்யாவின் சார்புநிலையைக் குறைக்கும் நோக்கத்துடன் இதே போன்ற சட்டத்தை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.

அப்துல் ரஹ்மான் கூறுகையில், சரவாக்கில் சூரிய ஆற்றல் குவிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது மற்றும் சோலார் பேனல் உற்பத்தியாளர்களுக்கான இடமாக மாநிலத்தின் நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதை விரிவாக்க முடியும் என்றார்.

“பயனர்கள் ஆற்றலைச் சேமிக்க முடியும் என்பதையும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தத் தொழிலின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்க முடியும் என்பதையும் இது உறுதி செய்கிறது”.

“ஒருவேளை எதிர்காலத்தில், (சோலார் பேனல்கள்) நம் மாநிலத்தில் பயன்படுத்தப்படலாம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கான அமைப்பின் ஒரு பகுதியாக மாறும், குறிப்பாக நகர்ப்புறங்களில்,” என்று அவர் மேலும் கூறினார்.