சட்டசபை கலைப்பு குறித்து மாநிலங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் விரைவில் தேர்தலை நடத்த முடியும்

தேர்தலுக்குச் செல்லும் ஆறு மாநிலங்கள் தேர்தல் ஆணையத்திற்கு  உத்தியோகபூர்வமாகத் தங்கள் திட்டமிட்ட கலைப்புத் தேதிகளைத் தெரிவிக்கும் வகையில்  அதிகப் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று பெர்சே வலியுறுத்தியுள்ளது.

முன்கூட்டியே அறிவிக்கப்படுவதன் மூலம், மாநிலங்களுக்கான நியமனம் மற்றும் தேர்தல் நாட்களை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியும்.

இன்று ஒரு அறிக்கையில், சில மாநிலங்கள் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி, பொதுமக்கள் மற்றும் வணிகங்களுக்கு தேவையில்லாமல் சுமையை ஏற்படுத்துவதாக தேர்தல் கண்காணிப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

“ஊடக அறிக்கைகளின்படி, நெகிரி செம்பிலானுக்கு கடைசி கலைப்பு தேதி, ஜூன் 30, எனவே தேர்தல் ஆணையம் காத்திருக்கும் போது ஒன்பது நாட்கள் வீணடிக்கப்படுகின்றன.

“தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் முன்னதாகவே அறிவிக்க முடிந்தால், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகள், பாதுகாப்புப் படைகள், வணிகங்கள் மற்றும் வாக்காளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் திட்டமிடுவதற்கு இது உதவும் .

“தேர்தல்களில் வாக்களிக்க தங்கள் அட்டவணையைத் திட்டமிடவும் இது அவர்களுக்கு உதவும்” என்று பெர்சே கூறினார்.

ஜூன் 23 அன்று சிலாங்கூர் அதன் கலைப்பை அறிவிக்கும் சமீபத்திய மாநிலமாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டசபை கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கெடா, கிளந்தான், தெரெங்கானு, பினாங்கு, நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற உள்ளது.

 

-fmt