MCA, MIC பொது தேர்தலை புறக்கணிக்கமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தியது

MCAவும, MICயும் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களிலிருந்து விலகும் முடிவை “புறக்கணிப்பு” என்று சித்தரிப்பதை நிராகரித்துள்ளன.

அதற்குப் பதிலாக, BN போட்டியிட ஒதுக்கப்பட்ட தொகுதிகளின்  அடிப்படையில், அம்னோ வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன் கூறினார்.

“கேமரன் மலை மஇகாவுக்கு சொந்தமானது, ஆனால் அம்னோவுக்காக (போட்டியிட) நாங்கள் விலகியுள்ளோம், ஏனென்றால் அம்னோவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று இன்று இரவு கோலாலம்பூரில் உள்ள மெனாரா டத்தோ ஓனில் நடந்த BN உச்ச மன்றக் கூட்டத்திற்குப் பிறகு அவர் கூறினார்.

ஊழல் காரணமாகச் சி.சிவராஜின் வெற்றியைத் தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து 2019 ஜனவரியில் நடைபெற்ற கேமரன் மலை இடைத்தேர்தலை அவர் குறிப்பிட்டார்.

மஇகா துணைத் தலைவர் சரவணன்

MIC ராம்லி முகமது நோர் இடைத்தேர்தலில் BN நேரடி வேட்பாளராகப் போட்டியிட்டார்.

“மஇகாவுடன் ஒப்பிடும்போது, அம்னோ வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பைக் கொண்டிருந்தது”.

“எங்களுக்கு முக்கியமானது BN இன் வெற்றி, MIC அல்லது MCA அல்ல…

இதற்கிடையில், MCA துணைத் தலைவர் மா ஹாங் சூன்(Mah Hang Soon), தேர்தலின்போது கட்சி BN  வேட்பாளர்களுக்காகக் களத்தில் பிரச்சாரம் செய்யும் என்றும், தேர்தலைப் புறக்கணிக்கும் பிரச்சினை எழாது என்றும் வலியுறுத்தினார்.

“கூட்டம் நல்லபடியாக நடந்தது. BN வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்கு நாங்கள் உதவுவோம் என்று விளக்கினோம் (போட்டியிடுவதில்லை என்ற முடிவு). இரு கட்சிகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

“நாசவேலை செய்ய மாட்டோம் . நான் ஏற்கனவே விளக்கியபடி, BN வேட்பாளர்களின் வெற்றியைப் பெற நாங்கள் பணியாற்றுவோம்,” என்று அவர் நேற்றிரவு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.