அரிய மண் களவாடிய கெடா மந்திரி பெசாருக்கு ரிம 5 லட்சம்  அபராதம்

கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர் (படம் மேலே) கடந்த ஆண்டு சிக், கம்போங் சோங்கில் அரிய மண் தனிமங்களை  திருடியதற்காக RM500,000 அபராதம் விதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறியுள்ளார்.

நேற்றிரவு கெடா பிஎன்-ஹராப்பான் தேர்தல் இயந்திர வெளியீட்டு விழாவில் பேசிய சைபுதீன், அபராதம் குறித்த கடிதம் அக்டோபர் 4, 2022 அன்று சனுசிக்கு கிடைத்ததா என்று வெளிப்படையாகக் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆண்டு கடைசியில் கெடா நிலம் மற்றும் சுரங்க அலுவலக இயக்குநரான பௌசி முஸ்தபாவிடமிருந்து கடிதம் வந்துள்ளதா என்று நான் சனுசியை கேட்க விரும்புகிறேன்..

“கம்பங் சோங், சிக், கெடாவில் உள்ள அரிய பூமித் தனிமங்களைத் திருடியதற்காக  500,000 ரிங்கிட் தொகையை செலுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது” என்று குவார் செம்பேடாக் பொது மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது சைபுதீன் (மேலே) கூறினார்.

தேசிய நிலச் சட்டம் 1965 (சட்டம் 828) இன் பிரிவு 426(1) இன் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார்.