சபாவில் அதிகப்படியான நீர் விலைகள்குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வாரிசான் திட்டமிட்டுள்ளது

தண்ணீரை அதிக விலைக்கு வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்காகச் சபா நீர்த் துறை மற்றும் மாநில அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர பல வாரிசான் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த விவகாரம்குறித்து MACC இடம் குழுப் புகார் அளிக்கும் என்று வாரிசான் துணைத் தலைவர் ஜுன்ஸ் வோங் கூறினார்.

மாநிலத்தில் நீர் துண்டிக்கப்படும்போது தனியார் டேங்கர் லாரிகள் அதிக விலைக்குத் தண்ணீரை விற்கும் போக்குகுறித்து அவர் குறிப்பிட்டார்.

“இந்த நிறுவனங்கள் நுகர்வோரிடமிருந்து நியாயமற்ற இலாபத்தை ஈட்டுவதைத் தொடர்ந்தால், இது செயல்பாட்டு செலவுகளை அதிகரிக்கவும், பொருட்களின் விலைகளை மேலும் உயர்த்தவும் கட்டாயப்படுத்தும் என்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்”.

போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதும், விநியோக இடையூறுகளின்போது மக்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டிய கூடுதல் செலவை ஏற்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

“இந்த நிறுவனங்கள் ஏன் இவ்வளவு அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுகின்றன என்பதை விசாரிக்க வாரிசான் தலைவர்கள் MACC இடம் ஒரு அறிக்கையைப் பதிவு செய்வார்கள்,” என்று வோங் ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கால்வின் சோங் (Elopura) மற்றும் ஜஸ்டின் வோங் (Sri Tanjung) ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

நேற்று, கோத்தா கினபாலு வாரிசான் பிரிவுச் செயலாளர் லோய் கோக் லியாங், லிகாஸில் உள்ள சபா பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஜூன் மாதத்தில் 23 நாட்கள் நீர் இடையூறு காலத்தில் ஒரு தனியார் நீர் வழங்கல் நிறுவனத்திடமிருந்து தண்ணீரை வாங்க ரிம145,000 செலவழித்ததாகக் குற்றம் சாட்டினார்.

மருத்துவமனைக்கு வருகை தந்தபின்னர், சபா மாநில சமூக மேம்பாடு மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ஜேம்ஸ் ரதிப், மாநிலத்தில் நீர் மற்றும் மின்சார விநியோக பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த வோங், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அதிக விலைக்கு விற்பதன் மூலம் அடிக்கடி விநியோக இடையூறுகளின் மோசமான சூழ்நிலையை நிறுவனங்கள் ஏன் பயன்படுத்துகின்றன என்று கேள்வி எழுப்பினார்.

“தண்ணீர் விநியோகம் இல்லாத சூழ்நிலையில் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்க அனுமதிப்பது ஏன்?’

“மருத்துவமனைக்குத் தண்ணீர் இல்லை என்பது மிகவும் மோசமானது, ஆனால் அவர்கள் சாதாரண கட்டணத்தைவிட அதிக கட்டணம் செலுத்தி காயத்தில் உப்பு தேய்க்கிறார்கள்”.

சபா நீர் வழங்கல் சட்டம் 2003 சபா நீர் விநியோகத்தை மேற்கொள்ள உரிமங்களை வழங்க அனுமதித்துள்ளது என்று வோங் கூறினார், இருப்பினும், கட்டணங்களைத் துறையால் மட்டுமே அமைக்க முடியும்.

சபாவின் பிற பகுதிகளான கோத்தா கினாபாலு, தவாவ் மற்றும் சண்டகன் போன்றவற்றிலும் இது போன்ற வழக்குகள் நடப்பதாக அவர் மேலும் கூறினார்.

“கோத்தா கினாபாலுவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிப்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாகச் சபா நீர்த் துறையின் 10 மடங்கு விலைக்குத் தனியார் நிறுவனத்திடம் தண்ணீரை வாங்குகிறார்கள்.

“இது ஒரு கன மீட்டருக்கு ரிம1.14 முதல் ரிம11.40 வரை இருக்கலாம்.

“மற்றொரு வழக்கு, கினாருட்டில் உள்ள லோக் காவி லைட் தொழில் பூங்கா, நீர்வளத் துறையிடமிருந்து ஒரு கன மீட்டருக்கு ரிம1.60 மட்டுமே இருக்கும்போது, ​​ஒரு கன மீட்டருக்கு ரிம30 விலையில் தண்ணீரை வாங்குகிறது,” என்று அவர் கூறினார்.

எலோபுரா சட்டமன்ற உறுப்பினர் கால்வின் சோங்

அந்தக் குறிப்பில், சண்டகானில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒரு டேங்கர் லாரிக்கு 900 ரிங்கிட் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் பல குடியிருப்புப் பகுதிகளுக்குச் சுமார் 3,000 லிட்டர் தண்ணீரை விற்பனை செய்வதாகச் சோங் குற்றம் சாட்டினார்.

“செகாலியட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள நீர் குழாய்கள் பழுதடைந்ததன் விளைவாக ஒன்பது நாட்களாக மாவட்டத்தில் தண்ணீர் தடைபட்ட பின்னர் இது நடந்தது.

“அதேபோல், தவாவில், நேற்று ஒரு தனியார் நிறுவனத்தால் ஒரு டேங்கர் ரிம600 விலையில் தண்ணீர் விற்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட இரண்டாவது நாளான நேற்று, தவாவ் மருத்துவமனையில் பணியாளர்களை ஒரு தனியார் நிறுவனம் அணுகியதாக வோங் கூறினார்.

தண்ணீர் நிறுவனம் ஒரு டேங்கருக்கு 600 ரிங்கிட் வழங்கியதாக அவர் குற்றம் சாட்டினார், நிறுவனத்திற்கு அனுமதி வழங்குகிறதா என்று கேள்வி எழுப்பினார்.

“சபா நீர் துறைக்குத் தண்ணீர் வழங்கவில்லை என்றால், இந்த நிறுவனம் எப்படி தண்ணீரை விற்க முடிகிறது?” என்று கேள்வி எழுப்பிய அவர், நீர்வளத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.