துவாரன் மருத்துவமனையின் அலட்சியம் – அமைச்சு பரிசீலிக்கும்

துவாரன் மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எதிரான குற்றச்சாட்டை சுகாதார அமைச்சகம் பரிசீலிக்கும்.

அன்மையில் எதிர்பாராமல் விழுந்தபின் துவாரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர்,  பணியில் இருந்த மருத்துவ ஊழியர்கள் கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என நோயாளியை வீட்டிற்கு திரும்ப அனுமதித்ததாக கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நோயாளி மரணமடந்தார்.

குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை கண்டறிய அமைச்சகம் விசாரணை நடத்தும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்வோம் என்று சபா சுகாதாரத் துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரையும் திணைக்களம் சந்திக்கும், நாங்கள் அவ்வப்போது அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிடுவோம்,” என்று அவர் புக்கிட் கெசிலில் கோலா தெரெங்கானு பிகேஆர் நாடாளுமன்ற வேட்பாளர் அசான் இஸ்மாயிலுக்கு பிரச்சாரத்தில் உதவும்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விளக்கத்தை அமைச்சகத்தால் வழங்க முடியவில்லை, ஆனால் புகாரை நிராகரிக்கவில்லை என்றும் ஜாலிஹா கூறினார்.

-fmt