சிலாங்கூரில் இந்தியர்களுக்கும் திட்டம் உள்ளது – பெரிக்காத்தான் உறுதி

சிலாங்கூர் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநிலத்தில் சிறுபான்மையினரான ற்றும் இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், பூர்வ குடிகளுக்கும்   சிறப்பு நிறுவனத்தை அமைப்பதாக பெரிக்காத்தான் நேசனல் உறுதியளித்துள்ளது.

இந்த நிறுவங்களுக்காக 50 மில்லியன் ரிங்கிட் மற்றும் பல்லின சமூகங்களில் நல்லிணக்கத்தை வளர்க்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காக 10 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ‘சிலாங்கூர் ஹார்மோனி’ நிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான தொகையின் ஒரு பகுதியாகும், இது கூட்டணி அடுத்த மாநில அரசாங்கத்தை அமைத்தால் ஒதுக்கப்படும்.

“5,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் குறைவான வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்க்க ஸ்கிம் பெடுலி சிஹாட் மற்றும் ஸ்கிம் பெர்லிண்டுங்கன் பெருபாதன் ஆகியவற்றை நாங்கள் விரிவுபடுத்துவோம்,” என்று நேற்று இரவு பெரிக்காத்தான் நேசனலின் அறிக்கையை வெளியிடும் போது பெரிக்காத்தான் நேசனல் தலைவர் முகைதின் யாசின் கூறினார். சிலாங்கூர் பெரிக்காத்தான் நேசனல் தலைவர் அஸ்மின் அலியும் அவருடனிருந்தார்.

ஸ்கிம் பெடுலி சிஹாத் என்பது சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்தபோது பிகேஆருடன் அஸ்மின் இருந்தபோது உருவாக்கப்பட்ட மருத்துவத் திட்டமாகும்.

65,000 குடும்பங்களுக்கு மாதந்தோறும் 400 ரிங்கிட் வழங்கி அடிப்படைப் பொருட்களை வாங்குவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட பாண்டுவான் பிரிஹாடின் கெலுர்கா சிலாங்கூர் என்ற ஒரு முயற்சியை பெரிக்காத்தான் நேசனல் அறிமுகப்படுத்தும். இந்த முயற்சிக்காக மாநில அரசு ஆண்டுதோறும் 312 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கும்.

உயர் திறன் வாய்ந்த துறைகளில் 100,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் சிலாங்கூரை “எதிர்காலத்திற்கான தொழிலாளர் மையமாக” மாற்ற முடியும் என பெரிக்காத்தான் நேசனல் நம்புகிறது என்று முகைதின் மேலும் கூறினார்.

கல்வி இணையவழி மயமாக்கல் அம்சங்கள் உட்பட மாநிலத்தின் கற்பித்தல் மற்றும் கற்றலின் தரத்தை மேம்படுத்த 120 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தத் தொகை ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்ப மதப் பள்ளிகளின் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படும்.

ஆண்டுக்கு 6 மில்லியன் ரிங்கிட் அல்-குர்ஆன் மற்றும் ஃபர்து ஐன் (கஃபா) வகுப்புக் கட்டணங்களுக்கான நிதி உதவியும் தேவைப்படும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இதற்கிடையில், சிலாங்கூரில் விளையாட்டு உள்கட்டமைப்புக்காக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 

-fmt