திரங்கானு பெர்சத்து தலைவரின் மீது எம்ஏசிசி போலிஸ் புகார்

சமூக ஊடக தளமான டிக்டோக்கில் வைரலான தெரெங்கானு பெர்சாத்து தலைவர் ரசாலி இட்ரிஸின் உரை குறித்து எம்ஏசிசி இன்று போலிஸ் புகார் ஒன்றை பதிவு செய்தது.

இன்று ஒரு அறிக்கையில், அந்த உரை கொண்ட வீடியோவை @wancin11 தளத்தில் வெளியிடப்ப்ட்டதாக MACC கூறியது.

அந்தச் செய்தியில், நவம்பர் 10-ம் தேதி கெமாமன் நாடாளுமன்ற இடைத்தேர்தல் எந்திரத்தின் தொடக்க விழாவின் போது ரசாலி (மேலே) தனது உரையில் பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“அரசாங்கம், எம்ஏசிசி மற்றும் நீதிபதிகளின் அமைப்புகள் தற்போதைய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் (சையது சாடிக் சையது அப்துல் ரஹ்மான்) மீதான தண்டனை தொடர்பான உயர் நீதிமன்ற நீதிபதியின் முடிவை மறுப்பதாகவும் அவர் கூறினார்”

சையத் சாடிக்கிற்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் , RM10 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்தப் உரை வெளிவந்தது.

இந்த நாட்டின் சட்ட அமலாக்க அமைப்பின் மீது  பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்பதால், அவதூறு மற்றும் குற்றச்சாட்டுகளை அது தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று MACC கூறியது.

“எம்ஏசிசி என்பது எந்தவொரு கட்சியாலும் கட்டுப்படுத்தப்படாமல் சுதந்திரமாகவும் தொழில் ரீதியாகவும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான செயல்பாடு மற்றும் பங்கை செயல்படுத்த சட்டத்தால் அதிகாரம் பெற்ற ஒரு அமுலாக்க அமைப்பாகும்.

“எனவே, இதுபோன்ற அவதூறு மற்றும் குற்றச்சாட்டுகளை வெளியிடுபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்ஏசிசி நம்புகிறது” என்று அது கூறியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் சே அலியாஸ் ஹமிட்டின் வெற்றியை திரெங்கானு தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழல் கூறுகள் இருந்ததாகக் கூறி, கெமாமன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 2ஆம் தேதியும், வேட்புமனு தாக்கல் நவம்பர் 18ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 28ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது