சூறாவளி- தென்னிந்தியாவில் உள்ள மலேசியர்களுக்கு எச்சரிக்கை

தென்னிந்தியாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் மலேசியர்கள், அது பல மாவட்டங்களில் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, மிகவும் கவனமாக  இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் பாபட்லா ஆகிய இடங்களில் ஏற்படும் இயற்கை பேரழிவை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக விஸ்மா   புத்ரா தெரிவித்துள்ளது.

“மணிக்கு 90-100 கிமீ வேகத்தில் வீசும் சூறாவளி, திங்கள்கிழமை காலை முதல் வெள்ளம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுத்தது, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகளை வெகுவாக பாதித்தது.

“பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் பாத்திரமாகவும், பாதுகாப்பாகவும் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் டில்லியில் உள்ள மலேசிய உயர் தூதரக அதிகாரிகளை பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்: +91-11-24159300 மற்றும் +91-85955 50594 (வேலை நேரத்திற்குப் பிறகு), அல்லது தொலைநகல் மூலம் +91-11-2688 1538 தொடர்பு கொள்ளலாம்.

அவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் அல்லது https://www.kln.gov.my/web/ind_new-delhi/home என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

சென்னையில் உள்ள மலேசியாவின் துணைத் தூதரகத்தை பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்: +914424334434/35/36 மற்றும் +917550022001, அல்லது மின்னஞ்சல் மூலம் [email protected]. அல்லது கூடுதல் தகவல்களை அவர்களின் முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/mwchennai.chennai. தொடர்பு கொள்ளலாம்.

தலைநகர் சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை தொடர்பான சம்பவங்கள் காரணமாக தமிழகத்தில் குறைந்தது எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-fmt